3,000 பழைய பேருந்துகள் இயக்கம்! நெருக்கடியில் போக்குவரத்துக்கழகம்! கிராமங்களுக்கான சேவை பாதிக்கப்படும் சூழல்!

0
47
Representative Image

2023ஆம் ஆண்டு இறுதிக்குள், நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கும் 3,000க்கும் மேற்பட்ட பேருந்துகளை மாற்றாவிட்டால், கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கங்கள் எச்சரிக்கின்றன.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், ஏப்ரல் மாதம் முதல், மிகப் பழைய வாகனங்களை, அதாவது 15 ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை நீக்கும் கொள்கையை(Vehicle Scrapping Policy) அமல்படுத்தியது.

மத்திய அரசு வழிகாட்டுதல்களின்படி, மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பிற அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உட்பட 7 போக்குவரத்துக் கழகங்களின் கீழ், ஆயுளைக் கடந்த 1,500 பேருந்துகள் உள்ளன. அவை பயன்பாட்டில் இருந்து ரத்து செய்யப்பட வேண்டியவை. ஆனால் அந்தப் பேருந்துகளை மாற்றுவதற்கு தமிழக அரசு ஒரு வருடம் அவகாசம் கோரியதால், அவை தற்போதுவரை இயக்கப்பட்டு வருகின்றன.

Also Read : சுட்டெரிக்கும் வெயில்! அச்சுறுத்தும் ‘வெட் பல்ப் வெப்பநிலை’! மனிதர்கள் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை!

“இந்த ஆண்டு இறுதிக்குள், மேலும் 1,500 பேருந்துகள் 15 ஆண்டு சேவையைக் கடந்துவிடும், அவைகளும் மாற்றப்பட வேண்டும். இந்த பேருந்துகளில் பெரும்பாலானவை கிராமங்களுக்கு நகர சேவைகளாக இயக்கப்படுகின்றன. இதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் 3,000 பழைய பேருந்துகளை மாற்றாவிட்டால், கிராமங்களுக்கான பேருந்து சேவை கடுமையாகப் பாதிக்கப்படும்” என்று தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கின்றனர்.

பழைய பேருந்துகள் தவிர, ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் மாநகராட்சிகளால் 1,500 பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதாகக் கூறும் அவர்கள், தடையற்ற இயக்கத்திற்காக, மாநகர போக்குவரத்துக் கழகம் தன் வசம் உள்ள அனைத்து பேருந்துகளையும் இயக்க, ஓட்டுநர்கள் உள்பட போதுமான பணியாளர்களை நியமிப்பது அவசியம் என்கின்றனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் உட்பட 8 போக்குவரத்து கழகங்களும் 20,127 பேருந்துகள் மற்றும் 18,700க்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட சேவைகளுக்கான பேருந்துகளை இயக்குகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர், “வாகனத்திற்கான ஆயுட்காலத்தை பொருட்படுத்தாமல்தான் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Also Read : சாதாரண வெந்தய டீ-யில் இவ்வளவு மருத்துவ குணங்களா? 20 Incredible Benefits Of Fenugreek Tea + How To Make It?

15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள், சேவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாலும், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் இருக்கும் உதிரி பேருந்துகள் மூலம் எப்போதுமான சேவைகளை உறுதி செய்ய முடியும். கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின்போது புதிய பேருந்துகள் வாங்குவது நிறுத்தப்பட்டது. 1,107 பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் வெளியிட்டபோது, மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

அனைத்து பேருந்துகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற பேருந்துகளாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது; விரைவில் புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்படும்,” என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 1ஆம் தேதி, 15 ஆண்டுகளுக்கும் மேலான அரசு வாகனங்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செல்லுபடியாகும் பதிவு சான்றிதழ் இல்லாமல் வாகனங்களை இயக்க முடியாது. போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் இதில் விதிவிலக்கல்ல.

“15 ஆண்டுகளுக்கும் மேலான போக்குவரத்து துறைக்கு சொந்தமான வாகனங்களை இயக்குவதை நிறுத்திவிட்டோம். செல்லுபடியாகும் பதிவு சான்றிதழ் இல்லாமல் வாகனங்களை இயக்க முடியாது. போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் இதில் விதிவிலக்கல்ல.” என்று மத்திய போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry