கிராமங்கள் தோறும் விரைவில் ஃபைபர் நெட் சேவை! இ-சேவை திட்டங்களை விரிவாக்க அரசு முடிவு!

0
29

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின் – அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.

Also Read : இந்தியாவில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை! மோடி அரசின் கொள்கைகளே காரணம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழகத்தில் கிராமங்கள் தோறும் விரைவில் பைபர் நெட் சேவை தொடங்கப்படும். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் பைபர் நெட் சேவை வழங்கப்படும். இ – சேவை மையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் சேவைகள் மூலமாக தமிழகத்தில் மாவட்டம் தோறும் 35டன் அளவிற்கு காகித பயன்பாடு குறைந்துள்ளது. இதன் மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மின்னணு சேவை(இ-சேவை) மூலம் வழங்கும் திட்டங்களின் எண்ணிக்கையை 200லிருந்து 300ஆக விரைவில் உயர்த்தவும், அனைத்து அரசு திட்டங்களை ஆன்லைனில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சேவைகளில் உள்ள குறைகளை கலைவதற்கு 2.0 திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதன் மூலமாக ஆன்லைன் சேவைகள் விரைவுபடுத்தப்படும். அரசு திட்டங்களுக்கு தகுதியான பொதுமக்களை தேர்ந்தெடுக்க இ-அலுவலகம் பெருமளவு பயன்படும்.” இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry