ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதலிடம்! 5 ஆண்டுகளுக்குப் பிறகு முகேஷ் அம்பானிக்கு இறங்குமுகம்!

0
53

இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமைக்குரியவர் முகேஷ் அம்பானி. இவருக்கு அடுத்ததாய் 2-ம் இடத்திலிருந்த கௌதம் அதானி, அம்பானியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 2015-ம் ஆண்டிலிருந்து முதலிடத்தில் இருந்து வந்தவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி. இவர் தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு, அதன் பங்கு விலை உயர்ந்ததைத் தொடர்ந்து கவுதம் அதானி முதலிடத்தை பிடித்துள்ளார். புளூம்பர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் நவம்பர் 23-ம் தேதி நிலவரப்படி முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 9,100 கோடி டாலராக இருந்தது. அதானியின் சொத்து மதிப்பு 8,880 கோடி டாலராக இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலைகள் நேற்று 1.72 சதவீதம் சரிந்தன. இதனால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்து முதலிடத்துக்கு முன்னேற வழியேற்படுத்தியது. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மாற்றத்துக்குரியவை என்பதால், விரைவில் முதலிரு இடங்களை வகிக்கும் கோடீஸ்வரர்கள் இடம்மாறவும் வாய்ப்புண்டு.

அதானி என்டர்பிரைஸஸ் பங்கு விலை 2.34% உயர்ந்தனஅதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல பங்கு விலை 4 % அதிகரித்தது. இதனால் சந்தை மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடி லாபம் ஈட்டியது. அதேநேரம் அதானி டிரான்ஸ்மிஷன் சந்தை மதிப்பு ரூ.2.13 லட்சம் கோடி சரிந்தது. அதேபோல அதானி பவர் சந்தை மதிப்பு ரூ.41 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது. அதானி கிரீன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலைகள் 1 % சரிந்தன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கவுதம் அதானியின் சொத்துமதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 5,500 கோடி டாலர் அதிகரித்துள்ளது. அதேநேரம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 1,430 கோடி டாலர் அதிகரித்துள்ளது. 2021-ம் ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு உலகின் மற்ற 10 முன்னணி கோடீஸ்வரர்களை விட அதிகமாகும். கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் சொத்து மதிப்பு 4,720 கோடி டாலரும், செர்கி பிரினின் சொத்து மதிப்பு 4,490 கோடி டாலரும் உயர்ந்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*