‘ஜெய் பீம்’ தனது நாவலை ஒத்து இருக்கிறது! ‘ஒட்டுத் துணிகள் பொறுக்கி தைத்த பட்டுச்சட்டை’! சோ. தர்மன் கடும் விமர்சனம்!

0
296

ஜெய் பீம் திரைப்பட காலண்டர் காட்சி ஏற்படுத்திய சர்ச்சையே இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், ஜெய் பீம் படத்தின் காட்சியமைப்புகள் தான் எழுதிய படைப்புகளை ஒத்திருப்பதாக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் சோ. தர்மன் மிக முக்கியமானவர். தான் எழுதிய சூல்நாவலுக்காக 2019-ம் ஆண்டு சாகித்ய அகாடமிவிருதை பெற்றார். 1992 மற்றும் 1994-ம் ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினையும், ‘கூகைஎன்னும் புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ம் ஆண்டுக்கான பரிசையும், 2016-ல்சூல்நாவலுக்காக சுஜாதா விருதையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், எழுத்தாளர் சோ. தர்மன், ஜெய் பீம் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ஜெய் பீம் படத்தின் காட்சியமைப்புகள் தன்னுடைய படைப்புகளில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளை ஒத்திருப்பதாகவும், தமிழ் சினிமா என்பதே ஒட்டுத் துணிகளை பொறுக்கி தைத்த பட்டுச்சட்டைதானே என்றும் தனது முகநூலில் சோ. தர்மன் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நான் 2005-ல் எழுதிய நாவல்கூகை.’ அதில், தாயையும் மகனையும் நிர்வாணமாக்கி ஒரே அறையில் போலீஸ்காரர்கள் அடைக்கும் சம்பவத்தை எழுதியிருப்பேன். இன்னொரு இடத்தில் மகன் முன்னால் தாயை நிர்வாணமாக்கும் காட்சியை கண்டதும் ஏட்டையாவை வெட்டிக் கொல்லும் பாத்திரத்தை எழுதியிருப்பேன்.

அப்புறம் தாயின் கண்முண்ணே மகளை பெண்டாள முயலும் ஒருவனிடம் அந்தத் தாய் சொல்வாள்.

ஐயா இது உங்களுக்குப் பிறந்த கொழந்தை

உங்க ரத்தத்தையே நீங்க குடிக்கப் போறீங்களா

இவ்வளவு நாளும் என்னை தின்னது காணாதா

இந்தாங்கய்யா என்னைய எடுத்துக்கோங்க மகள விட்ருங்க

இவ்வளவு கொடூரத்தை நான் பதிவு செய்திருப்பேன்.

அடுத்து நானும் நரிக்குறவனும் இரவு முயல் வேட்டைக்குப் போகும்போது, குட்டி முயலைச் சுடாமல் விட்டுவிட்டுப் போவான். நான் கேட்டதுக்கு அவன் சொன்ன பதில்,

பருவம் இல்லாதது எதையும் கொல்லக் கூடாது சாரே.. கொல்றதுக்கும் ஒரு பருவம் இருக்கு சாரே.”

இச்சம்பவத்தை என்னுடையஇரவின் மரணம்சிறுகதையில் சொல்லியிருப்பேன்.இவற்றையெல்லாம் நான் எழுதி 15 வருஷங்கள் ஆச்சு. இப்போது ஓடிக் கொண்டிருக்கும்ஜெய் பீம்படத்தில் இப்படியான காட்சியெல்லாம் இருக்கிறதாம். படம் இன்னும் பார்க்கவில்லை. பெரும்பாலான தமிழ் சினிமாக்கள் ஒட்டுத் துணிகள் பொறுக்கி தைத்த பட்டுச்சட்டைகள்தானே. வாழ்க தமிழ் சினிமா.’ என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய வெக்கை நாவலைத் தழுவி புனைந்ததுதான் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படம். அசுரன் திரைப்படம் தேசிய விருது பெற்றது. அதேநேரம் அசுரன் படத்தில் தனது நாவல் சிதைக்கப்பட்டிருப்பதாக சோ. தர்மன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

Also Read:- .எம்.டி.பி. தரவரிசையில் சூர்யா டீம் செய்த தகிடுதத்தம்! ஜெய்பீம் முதலிடம் பிடித்தது எப்படி? VELS EXCLUSIVE!

முன்னதாக, ஜெய் பீம் திரைப்படத்தில் வட்டார வழக்கில் வசனங்களை அமைத்ததற்காக படக் குழுவினர் அளித்த ரூ.50,000-ஐ எழுத்தாளர் கண்மணி குணசேகரன் திருப்பி அனுப்பினார். மேலும், ஜெய் பீம் படத்தில் தனது சமூகத்தை இழிவுபடுத்திவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இயக்குனர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்த பிறகு, ஜெய் பீம் சர்ச்சை ஓய்ந்துவிடும் என்று சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் நம்பினார்கள். ஆனால், ஜெய்பீம் ஒவ்வொரு நாளும் ஒரு பரிணாமத்தில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*