காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர், அந்தப் பள்ளியின் கழிவறையை சீருடையுடன் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் மாணவி ஒருவர் அவர் பயிலும் பள்ளியின் கழிவறையை அவருடைய பள்ளி மாணவி ஒருவர் அந்தப் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைகளில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது சமூக வலைதளங்களில் பரவியது சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆலம்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அந்த மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை கழுவச் சொன்னார்களா? என்பது தெரியவில்லை. பள்ளி கழிவறையை மாணவி சுத்தம் செய்யும் காட்சி ஆனம்பாக்கம் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சீருடையுடன் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யும் பட்டியலின மாணவி! இடம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா ஆலம்பாக்கம். @EPSTamilNadu @SeemanOfficial @thirumaofficial @VanniArasu_VCK @annamalai_k @sreeramjvc @Selvakumar_IN @raaga31280 @jkgche @katterumpu @Sundara10269992 pic.twitter.com/oNfjVlqibZ
— VELS MEDIA (@VelsMedia) March 29, 2022
இதுகுறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பாவதியை தொடர்புகொண்டு கேட்டபோது, “ பள்ளியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள கிராம தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள். தினதோறும் அவர்கள் மூலம், பள்ளி வளாகம் மறறும் கழிவறை தூய்மைபடுத்தப்படுகிறது. மாணவி எதற்காக கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உள்நோக்கத்தோடு யாரோ ஒருவர் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, பள்ளித் தலைமை ஆசிரியை புஷ்பாவதி மீது 17.பி பிரிவின் கீழ் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry