
கறிவேப்பிலை, முருங்கைக்காய் இனத்தைச் சேர்ந்த மரம். இது இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டது. கறிவேப்பிலை இலைகள் எலுமிச்சை மற்றும் மிளகு கலந்த மணம் கொண்டவை. நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்பட்டு உணவிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் இந்தக் கறிவேப்பிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
Also Read : சமையலை சீக்கிரமா முடிக்கணுமா? ஐந்தே நிமிடத்துல பூண்டு மோர் குழம்பை செய்து அசத்துங்க!
கறிவேப்பிலை நன்மைகள்
- கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
- காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
- இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
- சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
- கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
- நீண்ட நாட்கள் செரிமான பிரச்னையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்னைகள் நீங்கிவிடும்.
- கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
- சளி தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து வெளியேறிவிடும்.
- கறிவேப்பிலை உட்கொண்டு வர, கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
- குடல் புண், செரியாமை மற்றும் வாயு தொல்லை ஆகியவற்றிற்கு கருவேப்பிலை ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் வயிற்று பிரச்சனைகளுக்கும், குடல்புண் மற்றும் வாய்ப்புண் ஆகியவற்றிற்கும் சிறந்த மருந்தாக உள்ளது.
- கறிவேப்பிலை இரத்த சோகைக்கு மிக சிறந்த மருந்தாக உள்ளது. மாதவிடாய் கோளாறு மற்றும் ரத்த அணுக்களை சரிபடுத்தி அதிகப்படுத்துவது போன்றவற்றிற்கு கருவேப்பிலை சிறந்த மருந்து.
- கருவேப்பிலை என்பது கருவை உற்பத்தி செய்யக்கூடிய வேப்பிலை என்பதே இதன் பொருளாகும். ஆகவே கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது.
Also Read : உஷார்..! நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்! புளூடூத் ஹெட்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானதா..?
பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு பல்வேறு இணை நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கருவேப்பிலை நம் உடலில் உள்ள டூலட்-4 என்ற அமிலத்தினை தூண்டி சர்க்கரை நோயை சரி செய்ய உதவுகிறது. எனவே, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுபவைகளில் ஒன்றான கறிவேப்பிலை பொடி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- கறிவேப்பிலை
- உருட்டு உளுந்து
- கடலை பருப்பு
- கொத்தமல்லி
- மிளகு
- சீரகம்
- வரமிளகாய்
- பெருங்காயத்தூள்
- உப்பு
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, தேவையான அளவு கறிவேப்பிலைகளை போட்டு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அதே பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் முழு உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் மற்றும் வரமிளகாய்களைச் சேர்த்து வறுக்கவும்.
இவற்றுடன் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும். இவை நன்றாக பொடியானதும் சிறிதளவு உப்பு மற்றும் வறுத்து வைத்திருக்கும் கறிவேப்பிலையைச் சேர்த்து மீண்டும் பொடியாக அரைக்கவும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கறிவேப்பிலை பொடி தயார்.

Summary : கருவேப்பிலையில், கால்சியம், இரும்புச் சத்து, நார்ச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ பி சி போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ளன. கருவேப்பிலையில் கொழுப்புச் சத்து என்பது இல்லவே இல்லை. தினமும் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும். இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று ரத்தசோகை நோய் ஆகும். கருவேப்பிலையில் அதிகளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் தினமும் பத்து கருவேப்பிலை உண்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கலாம்.

பலவிதமான ஆராய்ச்சிகளிலும் கறிவேப்பிலை என்பது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது என்று கூறுகின்றனர். இயற்கையாகவே கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும், அதற்கான காரணிகள் கறிவேப்பிலையில் அதிகமாக இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். கறிவேப்பிலையில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. எனவே இது கொலஸ்ட்ரால் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry