பப்பாளியில் பொதிந்து கிடக்கும் வைட்டமின் சத்துகள்! எப்போது பப்பாளிப் பழம் சாப்பிடலாம்?

0
411

மரமாக வளரும் பப்பாளியின் தாயகம் மெக்ஸிகோ. உஷ்ண மண்டல நாடுகளில் எல்லாம் இது பயிராகிறது. இதில் பலவகைகள் உள்ளன. பப்பாளிப்பழம் ஒருவித தனிப்பட்ட மணமுள்ளது. பழம் மஞ்சள் நிறமாக இருக்கும், வருடம் முழுவதும் இம்மரம் பலன் தரும், விதையே இல்லாத ஒருவகைப் பழமும் உண்டு. இப்பழத்தில் வைட்டமின் சத்து அதிகம் இருக்கிறது.

பழங்களில் மாம்பழத்திற்கு அடுத்தாற்போல் அதிக வைட்டமின்உள்ள பழம் இதுதான். 100 கிராம் பழத்தில் 2020 முதல் 3000 IU வரை வைட்டமின்உள்ளது. 30 முதல் 130 மி.கி. வரை வைட்டமின்சிஉள்ளது. பழம் முதிர்ச்சியடையும் போது வைட்டமின்சிமிகுதியாகும். ஆனால் மாம்பழம் முதிர்ச்சியடையும் போது வைட்டமின்சிகுறையும். வைட்டமின் ஈ சத்தும் இதில் உள்ளது.

இப்பழத்தில் உள்ள சர்க்கரைப் பொருள்களில் 9.5 சதவிகிதம் எளிதில் செரிக்கவல்லது. இந்தச் சர்க்கரை சூரிய வெளிச்சத்திலிருந்து நேரடியாகப் பெறப்படுகிறது. எனவே, மே முதல் அக்டோபர் முடிய உள்ள காலத்தில் உண்டாகும் பழங்கள் அதிக சர்க்கரைச் சத்துள்ளவைகளாக இருக்கும்; மேலும் இக்காலத்தில் வைட்டமின்சியும் அதிகமாக இருக்கும்.

பாப்பைன்’ (Papain) என்ற பொருள், பால் போன்ற சாற்றில் அதிகமாகவுள்ளது. ‘பாப்பைன்வயிற்றில் சுரக்கும்பெப்சின்தன்மையை உடையது. ‘பெப்சின்மீன், முட்டை, பால் முதலியவற்றிலுள்ள புரதச்சத்தை ஜீரணிக்கக் கூடியது. எனவேபாப்பைன்குடல்புண்ணை ஆற்றவும் ஜீரணத்தை முடுக்கி விடவும் பயன்படுகிறது.

காய்ப்பருவத்தில் காயை நீள வாட்டில் வெட்டினால் பால் போன்ற சாறு வெளிவரும். அச்சாற்றைப் பிடித்துக் காயவைத்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதுவேபாப்பைன்ஆகும். அதன் மூலம் கீழ்க்கண்ட வியாதிகளைப் போக்கலாம்.

1. குடற்புண்: ‘பாப்பைன்’ 10 அரிசி எடை தினசரி கொடுத்து வர சில நாட்களில் குணம் ஏற்படும்.

2. டீப்தீரியா: ‘பாப்பைன்தூளை 20 அரிசி எடை தினசரி கொடுக்க வேண்டும். மேலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை வாயில் Glycerine தடவவேண்டும்.

3. கழலை: (watz) தோலில் உண்டாகும் கழலைகளையும் பருக்களையும் போக்கபாப்பைன்பயன்படுகிறது.

4. கரப்பான்: 12 கிராம்பாப்பைன்’, 5 கிராம் போராக்ஸ் (Borax) ஆகியவற்றை இரண்டு டிராம் வடிகட்டிய தண்ணீரில் குழப்பி கரப்பான் உள்ள இடங்களில் பூசி வர அந்நோய் விரைவில் குணப்படும்.

பப்பாளிக்காயை மாமிசம் அல்லது மீனுடன் சமைத்தால் மாமிசம் மென்மையடைகிறது. மாமிசத்தை பப்பாளி இலையில் இரண்டு மணி நேரம் பொதிந்து வைத்தாலும் அது மென்மையடையும். வட்டப்புழுக்கள் (Round worm) பப்பாளிக்காய் சாற்றில் உயிர்வாழ்வதில்லை.

பப்பாளி செடி நட்ட 12 முதல் 18 மாதங்களில் காய்க்கும். மாரிக் காலத்தில் அதிகம் காய்க்கும்; வருடம் முழுவதும் காய்க்கும். ஒரு மாதத்தில் 150 காய் வரை காய்க்கும்; ஐந்தாறு வருடங்கள் காய்க்கும். நடுத்தர பருமன் உள்ள பழங்கள் அதிகச்சுவையும், மணமும் உள்ளவை. பெரிய பழத்திலும் சிறிய பழத்திலும் அந்த அளவுக்கு சுவையும் மணமும் இருப்பதில்லை.

பழங்களை மரத்திலிருந்து பறித்தபின் இரண்டொரு நாட்கள் கழித்து சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் அப்பொழுது சுவையும் மணமும் அதிகரித்துவிடுகிறது. மரத்தில் பழுத்தப்பழம் சாலச்சிறந்தது. காய்களைக் காலந்தாழ்த்தாது சமைக்க வேண்டும்; சமைத்தபின் தண்ணீரை வடிக்கக் கூடாது.

இப்பழம் பசியை அதிகரிப்பதற்கும், ஜீரண சக்தியை முடுக்கி விடுவதற்கும், வயிற்றில் உப்புச்சத்தைக் குறைப்பதற்கும், மூத்திரக்கழிவை அதிகப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. பப்பாளிக்காயை கல்லீரல் நோய்க்கு மருந்தாக உபயோகிக்கலாம். மாதவிடாய் சரியாக ஏற்படாவிடத்து கெர்ப்பாயசயத் தசைகளைச் சுருங்கச் செய்து மாதவிடாயை வெளியேற்றும் இயல்பு பப்பாளிக் காய்க்கு உண்டு.

எனவே கர்ப்ப காலத்தில் இதை உபயோகிக்கக் கூடாது. இம்மரத்தின் மற்ற பாகங்களிலும் மருந்து தன்மை பரவி உள்ளது. இதன் விதை, தாக நோயைத் தவிர்க்கிறது; குடற் கிருமிகளையும் அகற்றுகிறது. யானைக்கால் வியாதியால் நரம்பு வலி ஏற்பட்டால் இதன் இலையை வீக்கத்திற்கு கட்டலாம்.

பப்பாளிப் பழத்தை எலுமிச்சம்பழம் அல்லது அன்னாசிப் பழச்சாற்றுடன் கலந்து பழக்கலவை (Salad) செய்து சாப்பிடலாம்; அல்லது பாலுடன் கலந்து சர்க்கரை சேர்த்து உண்ணலாம். பனிக்கட்டியுடன் சேர்த்து பனிப்பாகாக உண்ணலாம். மேலும் பழப்பாகு, பழச்சாறு, ஊறுகாய் முதலியனவும் தயாரிக்கலாம். பிரசவித்த பெண்கள் இதைச் சாப்பிடுவதால் பால் சுரப்பு அதிகப்படுகிறது.

நன்றிவீ.சேரந்தையாபிள்ளை, பி..பி.டி.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry