உடல் எடையை குறைக்கனுமா? ரவா உப்புமா சாப்பிடுங்க! நம்புங்க, உப்புமா ரொம்ப நல்லது! மாரடப்பைக் கூட தடுக்குமாம்!

0
1157

ரவா உப்புமா, ரவா கிச்சிடி…! இந்த பெயரைக் கேட்டாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவார்கள். ஆனால் ரவா உப்புமாவில் உள்ள சத்துக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது

கன்னடத்தில் `உப்பிட்டு’, தெலுங்கில் `உப்பிண்டி’, மலையாளத்தில் `உப்புமாவு’, மராத்தியில் `உப்பீட்’, கொங்கணியில் `ருலான்வ்’, இந்தியில் `உப்மா’, இப்படி இந்தியாவெங்கும் நீக்கமற நிறைந்த ஒரு சிற்றுண்டி இது. `ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை!’ என ஒரு பழமொழியே உண்டு. விருந்தினர்களின் திடீர் வருகையின்போதும், வேலைக்குப் போகும் மகளிருக்கும்  உற்றதுணையாக இருப்பதும் ரவா உப்புமாதான். 10 நிமிடங்களுக்குள் செய்துவிடலாம் என்கிற பெருமைக்குரிய சிற்றுண்டி இது. சாதாரண உப்புமாதான் சில பல மாற்றங்களுக்குப் பிறகு `கிச்சடிஎன்று ஆனது. இவைகளின் மேல் ஏன் இப்படி ஒரு வெறுப்பு?

ஆனாலும், உப்புமாவைப் பிடிக்காத குழந்தைகள்கூட, வாணலியில் அதன் அடிப்பிடித்த பகுதிக்கு(காந்தல் என சொல்வதுண்டு) ரசிகர்களாக இருப்பார்கள். ரவா உப்புமாவை சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிட, இதன் சுவை அலாதியாக இருக்கும். இந்த எளிய உணவில் எண்ணற்ற பல சத்துக்களும் இருக்கின்றன. இது, குழந்தைகளுக்கு ஊட்டம் கொடுப்பவை. சில விட்டமின்கள், புரதச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்தது. கிட்னி செயல்பாடுகளை மேம்படுத்தவும் ரவை உதவுவதாக கூறப்படுகிறது.

100 கிராம் உப்புமாவில் – 222 கலோரிகள், கொழுப்பு 3.3 கிராம்,  கார்போஹைட்ரேட் 40.2 கிராம், புரோட்டீன் 7.25 கிராம், சர்க்கரை 1.6 கிராம் ஆகியவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவையும் உள்ளன. கொஞ்சமாக இதைச் சாப்பிட்டாலும் முழு நிறைவு உண்டாகும்நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்; மெதுவாகத்தான் செரிமானம் ஆகும் என்பதால், அதிகமாக உணவு உட்கொள்ளவேண்டியிருக்காது. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கும், இருக்கும் எடையைப் பராமரிக்க விரும்புகிறவர்களுக்கும் ரவா உப்புமா சிறந்தது. இது ஆற்றலைத் தரக்கூடிய சிற்றுண்டி. காலையில் ஒருவர் உப்புமா சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதற்குமான சக்தி இதிலிருந்து கிடைத்துவிடும்; பொதுவாக, மதிய நேரத்துக்குப் பிறகு சிலருக்கு ஏற்படும் சுறுசுறுப்பின்மை, மந்தத் தன்மையையும் போக்கும். இதைத் தயாரிக்கும்போது நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துத் தயாரிப்பது கூடுதல் சக்தியை அளிக்கும்

உடல் எலும்புகளுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் நன்மை செய்யக்கூடியது ரவா உப்புமா. ரவை, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கச் செய்யும். ரவை, இதய நலத்துக்கும் உதவக்கூடியது. இதயச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும். ரவையில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்ரத்தச் சோகை வராமல் தடுக்கும். ரவையிலிருக்கும் `குளூட்டன்’ (Gluten) என்ற பசைச் சத்து ஒத்துக்கொள்ளாதவர்கள், ரவா உப்புமாவைத் தவிர்ப்பதே சிறந்தது.  கோதுமையை பாலீஷ் செய்து, பல கட்ட மாற்றங்களுக்குப் பிறகுதான் ரவை தயாராகிறது. எனவே இதை, அடிக்கடி சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. இதைச் சாப்பிடும் அளவிலும் கவனம் தேவை. அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் சற்று அதிகமாகவும், குறைந்த உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைவாகவும் சாப்பிட வேண்டும்.

கோதுமையின் நடுப்பகுதியைச் சுற்றி இருக்கும் சிறிது கடினமான புரதப்பகுதிதான் ரவை(சூஜி) . மீதமிருக்கும் 40% பாகங்களில் இருந்து எடுக்கப்படுவது தான் கோதுமை மாவு (ஆட்டா). பொதுவாக ரவையின் பெயர் துரும் கோதுமை (Durum Wheat). கோதுமையின் மேல்தோலை நீக்கி, அதனுடைய ஸ்டார்ச் அடங்கிய கருஊனை (endosperm) தனியாக பிரித்து சலித்து ரவையாக எடுக்கப்படும். ரவையிலிருந்து கிடைக்கக் கூடிய செலினியம் என்ற வேதிப்பொருள் மிகச்சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்டாகச் செயல்படும். ரவையில், சர்க்கரை சத்தும், குளூட்டன் என்பதும் இருப்பதால், நீரழிவு நோய் மற்றும் குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry