கோவிட்-19 வைரஸ் பெருக்கத்தை குறைக்கும் மூலிகை தேநீர்! ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

0
60

சீமை கற்பூரவள்ளி, காட்டு எள்ளு ஆகிய மூலிகை டீ அருந்தினால், உடலில் தொற்றிய கோவிட்-19 அதிகமாவது தடுக்கப்படுவதாக ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை ஆங்கிலத்தில் Sage, Perilla Herbal tea என அழைக்கின்றனர்.

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இதுவரை சரியான மருந்துகளோ, தடுப்பூசியோ  கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பை தடுக்க ஆடாதொடா குடிநீர், கபசுர குடிநீர், மூலிகை தேநீர் பருகலாம் என்று ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளதுஇந்நிலையில் கோவிட்-19 தொற்று பாதித்த நபர், சீமை கற்பூரவள்ளி, காட்டு எள்ளு ஆகிய மூலிகை தேநீர் அருந்திவந்தால், குறுகிய காலத்தில் வைரஸ் பெருக்கம் பெருமளவு குறைக்கப்படும் என்று ஜெர்மனி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

MedRxiv என்ற அமைப்பும், யேல் பல்கைலைக்கழகமும் இணைந்து இந்த ஆராய்ச்சியை செய்துள்ளன. ஆராய்ச்சி முடிவானது பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. Mint குடும்பத்தைச் சார்ந்த இந்த வகை மூலிகைகள், உடல் செல்களில் தொற்றியிருக்கும் கோவிட்-19 வைரஸுக்கு எதிராக வீரித்துடன் செயல்படுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். அதேநேரம், அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கு மாற்றாக இதை கருதக்கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியை செய்த எழுவர் குழு, சீமை கற்பூரவள்ளி, காட்டு எள்ளின் பசுமையான இலைகளுக்கு பதிலாக, காயவைத்த இலைகளையே பயன்படுத்தியுள்ளனர்.

Source : Universally available herbal teas based on sage and perilla elicit potent antiviral activity against SARS-CoV-2

இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த சில உணவு தயாரிப்பு நிறுவனங்கள், டெங்கு மற்றும் கொரோனாவுக்கு வழங்கப்படும் சித்த மருந்துகளான, நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை, இணை உணவாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக புகார் எழுந்துள்ளது. “Neem leaf soup” என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளில் அவை சந்தைப்படுத்தப்படுகின்றன.

இது சித்த மருத்துவர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துப்பொருளான நிலவேம்பையும், கபசுரக் குடிநீரையும், இணை உணவாக  உட்கொள்ளும்போது, எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று, ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவத்துக்கான மத்திய அரசின் ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் திருநாராயணன் எச்சரித்துள்ளார். இதுமட்டுமின்றி, உணவு உற்பத்தியாளர்களால், சுமார் 15 வகையான மருந்துகள், இணை உணவாக விற்பனை செய்யப்படுவதாக கூறும் அவர், அத்தகைய நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Also Read : கொரோனாவை தடுக்கும் சிறந்த மாஸ்க் எது? Re Usable மாஸ்க் பாதுகாப்பானதா? வேல்ஸ் மீடியா சிறப்புப் பார்வை!

Also Read : 30 விநாடிகளில் கொரோனா வைரஸை கொல்கிறது மவுத்வாஷ்! பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry