கொரோனாவை தடுக்கும் சிறந்த மாஸ்க் எது? Re Usable மாஸ்க் பாதுகாப்பானதா? வேல்ஸ் மீடியா சிறப்புப் பார்வை!

0
46

அன்றாடம் டிரஸ் அணிவதுபோல, மாஸ்க் அணிவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஒருசிலர் முகத்தை மூடினால் போதும் என்ற நினைப்பில் கிடைக்கும் துணியில் மாஸ்க் தைத்து போட்டுக்கொள்கின்றனர். எந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்?, தொற்றிலிருந்து எந்த அளவு அது நம்மை காப்பாற்றும்?

பெரும்பாலான மாஸ்க்குகள் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுபவை, இவற்றை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால், ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் கூடுதலாக பூமிக்கு  சென்றடைகிறது.  சாதாரண கணக்கெடுப்பின்படி பார்த்தால், இந்தியாவில், ஒரு நாள் மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் மாஸ்க்குகள் மூலம், ஆண்டொன்றுக்கு 14 லட்சம் டன் அசுத்தக் கழிவுகளும், 6 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் சேருகிறது. மாஸ்க்கில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் ஃபைபர்கள், நிலம், நீர் மற்றும் நீர்வழிப்பாதைகளுக்கு தீங்கு விளைவிக்கிறது

மாஸ்க் எனப்படும் முகக்கவசம் தயாரிப்பதில், உலகிலேயே சீனாதான் முன்னணியில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி சீனாவில் நாளொன்றுக்கு 116 மில்லியன் மாஸ்க்குகள் தாயாரிக்கப்படுகின்றன. இது உலக அளவில், கழிவு மேலாண்மையில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவே தீங்கு ஏற்படுத்தக்கூடிய, அதே நேரம் தரமான மாஸ்க்குகளை வடிமவைப்பதும், பயன்படுத்துவம் கட்டாயமாகிறது. அதற்கான தீர்வை விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

பொதுவாக முகக்கவசம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்குகளை கொண்டதாக இருக்கும். வெளிப்புறம் இருக்கும் அடுக்கு, தண்ணீர் போன்ற திரவங்களை தடுக்கும். உள்புறம் கடைசியாக இருக்கும் அடுக்கு, ஈரப்பதத்தை உறிஞ்சும், சுவாசத்தை சீராக்கிக்கொடுக்கும். நடுவில் இருக்கும் அடுக்குகள், ஃபில்டர்களாக செயல்படும்.

ஒவ்வொரு வகையான மாஸ்க்கும், வெவ்வேறு விதமான பொருட்களால், வடிவங்களால் மாறுபடுகிறது. என்-95 மாஸ்க்கைப் பொறுத்தவரை, அதை அணிபவர்களுக்கு 95 சதவிகித பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. இவற்றை சுகாதாரப் பணியாளர்களே பெரும்பாலும் அணிவார்கள். முகத்தோடு ஒட்டியவாறு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் ஸ்டிராப்புகள் பாலிஐசோப்ரீனிலும், ஸ்டாபிள்கள் ஸ்டீல்களிலும், மூக்குக்கான பஞ்சு பாலியுரேதானிலும், மூக்கு கிளிப் அலுமினியத்திலும், ஃபில்டர் பாலிப்ரொப்பைலினிலும், வால்வானது பாலிஐசோப்ரீனிலும் தயாரிக்கப்படும்.

சர்ஜிக்கல் மாஸ்க்கைப் பொறுத்தவரை, அறுவை சிகிச்சை அறை போன்ற தூய்மையான இடங்களில், உமிழ்நீர் துளிகள் மற்றும் காற்றிலுள்ள கிருமிகளை தடுக்கம் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதையும் ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும். பொதுவாக இந்த வகை மாஸ்க்குகள் பாலிப்ரோப்பைலீனில் தயாரிக்கப்படுகிறது.

அடுத்து துணி மாஸ்க்கை எடுத்துக்கொண்டால், இது பொதுமக்கள் பெரும்பாலானோரால் அணியப்படுவது. வீட்டிலுள்ள பழைய துணி அல்லது புதிய துணிகளின் துண்டுகளைக் கொண்டு சிலர் வீட்டிலேயே இதனை தயாரிப்பார்கள். இதை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.

இதன் வெளிப்புற அடுக்கு, பாலியெஸ்டர்,  பாலிப்ரொப்பைலீன், காட்டன் ஆகியவற்றாலும், உள் அடுக்கானது, காட்டன் அல்லது, காட்டன் பாலியெஸ்டர் கலந்த துணியால் அமைக்கப்படும். மருத்துவ மாஸ்க்குகளோடு ஒப்பிடும்போது,  வைரஸ் போன்ற நுண்கிருமிகளை வடிகட்டும் திறன் குறைவுதான். ஆனால், முறையாக வடிவமைக்கப்பட்டு, முகத்தோடு நன்றாக ஒட்டியபடி இருந்தால், அதன் திறன் மேம்படும்.

https://www.health.gov.au/resources/publications/how-to-make-cloth-mask

துவைத்து பயன்படுத்தப்படும் மாஸ்க்குகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், தேவையான பாதுகாப்பை கொடுக்கும். ஃபில்டர்களை மட்டும் மாற்றி பயன்படுத்தும் மாஸ்க்குகளையும் நாம் பயன்படுத்தலாம்.  துவைத்து பயன்படுத்தும் மாஸ்க்குகளை தயாரிக்கும்போது, சின்த்தடிக்ஸ் உடன் மக்கும் பொருட்களை சேர்த்து உருவாக்க வேண்டும். அதவாது, வாழை மரத்திலிருந்து எடுக்கப்படும் நார்களை கொண்டு மாஸ்க்குகளை தயாரிக்கலாம். சாதாரண மாஸ்க்கைவிட மிகச் சிறந்ததாக இது கருதப்படுகிறது. அதேபோல் இரண்டே மாதங்களில் மக்கும் தன்மை கொண்ட இவை, மண்ணுக்கு உரமாகவும் மாறுகிறது

http://region10.dost.gov.ph/260-handmade-paper-from-abaca-fiber-potential-material-for-face-masks

பொதுவாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வாஷிங் மெஷின்கள் மூலம் மாஸ்க்குகளை துவைத்து பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். அதேநேரம், சூழியலுக்கு தகுந்தாற்போல, மாஸ்க் பயன்பாட்டை நாம்தான் நிர்ணயிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாஸ்க்குகளை தயாரிக்குமாறு அரசையும், உற்பத்தியாளர்களையும் நாம் வலியுறுத்த வேண்டும்.

SourceThe Conversation

 Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry