10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகளிலும் கேரளாவுக்கு கனிமங்களை கொண்டு செல்லலாம்! ஐகோர்ட் அனுமதி!

0
52
There is no restriction on transporting minerals in trucks of more than 10 wheels to Kerala through Tamil Nadu check posts.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த `இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி’ பொதுச் செயலாளர் நாகராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “கேரளா மற்றும் தமிழகம் முழுமைக்கும் வாகனங்களை இயக்குகிறோம். கேரளாவின் பெரும்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குவாரி பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடக்கும் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான கிராவல் ஜல்லி கற்கள், எம்.சாண்ட், குவாரி தூசி மற்றும் மணலுக்கு தமிழகத்தையே சார்ந்துள்ளோம்.தமிழகத்தின் உதவி இல்லாமல் கேரளாவின் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு உரிய அனுமதியுடன் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர், புளியரை காவல் ஆய்வாளர் மற்றும் கனிமவள அதிகாரிகள் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்களைக் கொண்டு செல்லத் தடை விதித்துள்ளனர்.

Also Read : மூளைக்கும் வயிற்றுக்கும் நடக்கும் சிக்னல் பரிமாற்றம்! உணவுக்கும் மூளைக்குமான சிலிர்க்கவைக்கும் தொடர்பு! Can nutrition affect your mental health?

இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு, கோவை மாவட்டம் வாளையார் சோதனைசாவடிகளிலும் இந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிமங்கள் கொண்டுச் செல்லத் தடை விதிக்ககூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரரின் வழக்கறிஞர் புகழ்காந்தி வாதிடுகையில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக அரசாணைப்படி, 35 டன் மற்றும் 55 டன் வரை லாரிகளில் கனிமங்கள் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியுடன் சட்டப்பூர்வமாக கனிமங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க முடியாது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்றார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரகதிரவன் ஆஜராகி, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சாலை பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு மோட்டார் வாகனசட்டப்படி வாகனத்தின் வேகம் மற்றும் எடை அளவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உண்டு என்றார்.

Also Read : தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கொள்ளை! துணைபோகும் பொதுப்பணித்துறை? கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “தமிழகத்துக்கு கடந்த 2021-22-ல் பெரும் கனிமங்கள் மூலம் ரூ.817.52 கோடியும், 2022-23-ல் ரூ.1049.22 கோடியும், சிறு கனிமங்கள் மூலம் 2021-22ல் 365.89 கோடியும், 2022-23ல் 598.29 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், 2022-23-ல் மட்டும் கர்நாடகாவில் ரூ.5,945.77 கோடியும், ஆந்திராவில் ரூ.4,756 கோடியும், கேரளாவில் ரூ.317 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது. சிறு கனிமங்கள் மூலம் தமிழகத்துக்கு மிகக் குறைந்த அளவே வருவாய் கிடைத்துள்ளது.

உரிமம் வரித் தொகை கட்டணம் 2 தலைமுறைகளாக உயர்த்தப்படவில்லை. தற்போதுதான் இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, கனிமவளத் துறை ஆணையர் தரப்பில் உரிய விளக்கமளிக்க வேண்டும். 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அடுத்த விசாரணை நவம்பர் 25-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

Also Read : கேரளாவுக்குக் கனிமம் கொண்டு செல்வது தொடர்பான ஐகோர்ட் உத்தரவால் கடும் அதிருப்தி! வழக்கில் இணைய விவசாயிகள் சங்கம் முடிவு!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry