ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி! அமித் ஷா கருத்து! 2011-ல் இந்தி குறித்து ப.சி. குழு அளித்த பரிந்துரை என்ன?

0
158

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது `இந்திய மொழியில்’ இருக்க வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா கருத்து தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்துக்கு தலைமையேற்றுப் பேசிய அவர், “ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது `இந்திய மொழியில்’ இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா மற்றும் நிசித் பிரமானிக், அலுவல் மொழி நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் – தி.மு.க. ஆட்சியின்போது, ப. சிதம்பரம் தலைமையில் “அலுவல் மொழிக்கான நிலைக்குழு” இயங்கியது. அக்குழு தனது 9-வது அறிக்கையை 2011இல் இந்திய அரசுக்கு அளித்தது. அதில், “குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களும், மற்றவர்களும், அவர்களுக்கு இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்தால், இனி அவர்கள் நாடாளுமன்றத்திலும், வெளியில் பொது நிகழ்வுகளிலும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் அளிக்கும் விடைகளை, இந்தியில் மட்டுமே அளிக்க வேண்டும்”.

“இந்தியா முழுவதும் அனைத்துவகைப் பள்ளிக் கல்வியிலும் (மாநில அரசுப் பாடத்திட்டக் கல்வி உட்பட),1 முதல் 10ஆம் வகுப்பு வரை இந்தி ஒரு கட்டாயப்பாட மொழியாக இருக்க வேண்டும். முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளிலும் கேந்திரியா வித்தியாலயாப் பள்ளிகளிலும் இது கட்டாயமாக்கப்படும். அடுத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது பற்றி நடுவண் அரசு எல்லா மாநில அரசுகளுடனும் விவாதிக்க வேண்டும்”.

Source: 1. https://rajbhasha.nic.in/sites/default/files/cpolreport9-chapter1eng.pdf 

2. Why President, ministers may have to deliver speeches only in Hindi

ப. சிதம்பரம் குழுவின் பரிந்துரைகளை ஆறாண்டுகள் கழித்து பா.ஜ.க. அரசு சட்டமாக்கியது. ப. சிதம்பரம் அமைச்சராக இருந்த அதே காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பரிந்துரைகளை சட்டமாக்கினார்.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry