பெட்ஷீட்டுகளை தவறாமல் துவைப்பது என்பது பல் துலக்குவது போன்று முக்கியமானது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் படுக்கைகளுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம். அதாவது நாளின் பெரும்பகுதியை படுக்கையில் செலவிடுகிறோம், ஒப்புக்கொள்கிறீர்களா? வார இறுதி நாட்கள், படுக்கையில் சோம்பேறித்தனமாக கழிக்கப்படுகிறது. எனவே, படுக்கையை சுத்தம் செய்வதை, முக்கிய வீட்டு வேலைகளில் ஒன்றாக கருதுவது முக்கியம்.
உங்கள் படுக்கையை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருப்பது சிறந்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, படுக்கை விரிப்பை அடிக்கடி துவைத்து மாற்றுவதுதான். ‘அடிக்கடி’ என்பது உங்கள் பெட்ஷீட்டில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? படுக்கையில் சாப்பிடும் பழக்கம், படுக்கையில் செல்லப்பிராணிகள் தூங்குவது போன்ற சில காரணிகளைப் பொறுத்தது.
Also Read : வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடிக்கலாமா..? இத்தனை நாளா இது தெரியாமலா இருந்தோம்?
சுத்தமான படுக்கை நன்றாக தூங்க உதவுகிறது, சுத்தமான படுக்கை விரிப்புகள் தோல் நோய்த் தொற்றுகளைத் தடுக்கின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, வாரந்தோறும் படுக்கை விரிப்புகளை துவைக்க வேண்டும்.
- வீட்டில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இருந்தால், பெட்ஷீட்களை அடிக்கடி துவைக்கவும்.
- வீட்டில் அதிக நேரத்தை படுக்கையில் கழித்தால், வாரத்திற்கு இரண்டு முறை பெட்ஷீட்டை மாற்றவும்.
- வீட்டிலுள்ளவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், வாரத்திற்கு 2-3 முறை பெட்ஷீட்டை மாற்றுவது அவசியம். வைரஸ்/பாக்டீரியா தொற்று பரவாமல் இது பெருமளவு தடுக்கும்.
- தூங்கும் போது அதிகமாக வியர்த்தால், உங்கள் படுக்கை விரிப்பு, தலையணை உறைகளை வாரத்திற்கு 2-3 முறை துவைக்க வேண்டும்.
- படுக்கை விரிப்புகளைப் போலவே, உங்கள் டூவெட்டுகளையும்(Duvets) சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- அடிக்கடி பெட்ஷீட்டை பயன்படுத்தவில்லை என்றாலும், மாதந்தோறும் துவைப்பது கட்டாயம்.
- கோடை காலத்தில் பெட்ஷீட்டுகளை வாரம் இரண்டு முறை துவைக்க வேண்டும்.
- வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த காலங்களில் படுக்கையறையில் பாக்டீரியா வளர்ச்சி தூண்டப்படும். எனவே பாக்டீரியா வளர்ச்சியை தடுக்க அடிக்கடி பெட்ஷீட்களை மாற்றுவது நல்லது.
Also Read : மழைக்காலத்தில் Heart Attack வர இந்த 10 உணவுகள்தான் காரணம்!
National Sleep Foundationஇன் 2012 வாக்கெடுப்பின்படி, 91 சதவீத மக்கள் ஒவ்வொரு வாரமும் பெட்ஷீட்டுகளை மாற்றுகிறார்கள். இது அவசியமானது. ஏனென்றால், கண்களுக்கு புலப்படாத நிறைய விஷயங்கள் பெட்ஷீட்டில் குவியக்கூடும். ஆயிரக்கணக்கான இறந்த சரும செல்கள், தூசிகள், சிறு பூச்சிகள் மற்றும் சிறுநீர் கூட பெட்ஷீட்டில் இருக்கக்கூடும்.
எப்போதெல்லாம் பெட்ஷீட்டுகளை அடிக்கடி துவைக்க வேண்டும்?
- அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் டஸ்ட் அலர்ஜி.
- தொற்று அல்லது புண் இருக்கும்போது
- அதிகமாக வியர்க்கும்போது
- செல்லப்பிராணி படுக்கையில் தூங்கும்போது
- படுக்கையில் சாப்பிடும்போது
- குளிக்காமல் படுக்கைக்குச் செல்லும்போது
பெட்ஷீட்டுகளை அடிக்கடி துவைக்காவிட்டால், பூஞ்சை, பாக்டீரியா, மற்றும் விலங்குகளின் டேன்டருக்கு நாம் ஆட்படக்கூடும். இதனால் அரிப்பு மற்றும் தோல் அழற்சி ஏற்படலாம். ஆஸ்துமா மற்றும் அலர்ஜி உள்ளவர்கள் அழுக்கு பெட்ஷீட்டுகளில் தூங்குவதன் மூலம் பாதிப்பு அதிகமாகும். பெட்ஷீட் சுத்தமாக இல்லாவிட்டால் இரவு தூக்கத்திற்குப் பிறகு மூக்கு அடைப்பு மற்றும் தும்மலை அனுபவிக்க நேரிடும். அழுக்கான துணிகள் மூலமாக நீங்கள் தொற்று நோய்களைப் பரப்பலாம் அல்லது பெறலாம்.
Also Read : கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள 10 வெஜ் உணவுகள்! யார் யாருக்கு எவ்வளவு இரும்புச்சத்து தேவை?
பெட்ஷீட்டுகள் மற்றும் பிற படுக்கைகளை சூடான நீரில் ஊறவைத்து துவைக்க வேண்டும். நீர் எவ்வளவு சூடாக இருக்கிறதோ, அவ்வளவு பாக்டீரியா மற்றும் ஒவ்வாமைகளை அகற்றுகிறீர்கள். துவைத்த பிறகு பெட்ஷீட்டுகளை சலவை செய்யவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தலையணைகளை மாற்ற வேண்டும். தலையணை உறையைப் பயன்படுத்துவதால் தூசி மற்றும் பாக்டீரியாக்கள் சேருவதை குறைக்க மட்டுமே முடியும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry