COVID-19 தொற்று இருக்கிறதா என்பதை வீட்டிலிருந்தவாறே கண்டறிவது எப்படி? பிரபல மருத்துவரின் சிம்ப்பிள் டிப்ஸ்!

0
22

ஊடகங்களால், கொரோனா 2-வது அலை குறித்த அச்சம் மக்களிடையே பெருமளவு நிலவுகிறது. கொரோனா குறித்து தேவையற்ற பதற்றம் இல்லாமல், நாம் என்ன செய்ய வேண்டும்?, வீட்டில் இருக்க வேண்டிய பொருட்கள் என்ன?, என்னென்ன பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தற்போதுள்ள நிலையில் சிறிய இருமல், காய்ச்சல் இருந்தால் கூட கோவிட்-19 தொற்றி இருக்குமோ என்கிற சந்தேகமும், பயமும் வருகிறது. இதனால் பதற்றம் ஏற்பட்டு கவலைப்படுவோர் அதிகம். அவ்வாறு கவலைப்படும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அதே நேரம் வைரஸ் தொற்றி இருக்கலாம் என உறுதியாக சந்தேகிப்போர் உடனடியாக தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் அல்லது அரசு ஸ்க்ரீனிங் சென்டருக்கு செல்ல வேண்டும். வைரஸ் தொற்றி உள்ளதா என்பதை வீட்டில் இருந்தவாறே எப்படி கண்டறியலாம் என்பதை, சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் சந்தோஷ் ஜேகப் விளக்கியுள்ளார். கோவிட்-19 தொற்றியவர்களுக்கு இவர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்.

கோவிட்-19 வைரஸ் காற்றில் பரவுவதால், அரசு வழிகாட்டு நெறிமுறைகளான, முகக்கவசம் அணிதல், தனிபர் இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல் போன்றவற்றுடன் கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருத்தல் அவசியம். அற்ப காரணங்களுக்காக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், கோவிட் வைரஸ் காற்றில் பரவுவதை உணர்ந்து, தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தவாறு பணியாற்றச் செய்வது சிறப்பு.

முடிந்தவரை விரைவாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டால், தொற்று ஏற்பட்டாலும், வீரியம் மிகமிகக் குறைவாகவே இருக்கும். அத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 10 ஆயிரம் பேரில் நான்கு பேருக்கு மட்டுமே தொற்று ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி போட்டிருந்தாலும், இதற்கு முன்பு தொற்று ஏற்பட்டிருந்தாலும், கோவிட்-19 அறிகுறி தென்பட்டால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அறிகுறியின் முதல் நாளே, தொற்றின் முதல் நாளாகக் கருதப்படுகிறது.

சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சுப் பகுதியில் நீடித்த வலி அல்லது அழுத்தம், புதிய குழப்பம், தூக்கத்திலிருந்து கண்விழிக்க இயலாமை அல்லது தொடர்ந்து விழித்திருக்க இயலாமை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவசர சிகிச்சை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். காய்ச்சலைத் தவிர வேற எந்த அறிகுறியும் இல்லையென்றால் பாராசிட்டமால் மாத்திரை மட்டும் போதும். ஆக்சிஜன் அளவு குறைந்தால், மருத்துவ உதவி கிடைக்குவரை, வயிறு, நெஞ்சு ஆகியவை தரையில் படுமாறு குப்புறப்படுத்து ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும்.

தெர்மோமீட்டர், பல்ஸ் ஆக்சிமீட்டர், பாராசிட்டமால் மாத்திரை, மூக்கடைப்பை நீக்கும் nasal drops, நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் சோர்வை போக்குவதற்கான ORS solution, ஆவி பிடிப்பதற்காக Vaporiser machine for steam inhalation போன்றவற்றை வீட்டில் வைத்திருந்தால், முதலுதவிக்காக பயன்படும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry