தமிழகத்தில் 6 மாவட்டங்கள் உள்பட, 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு! மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை என்ன?

0
13

நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு, மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களும் அடங்கும்.

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்கு கடந்த 2 வாரங்களை ஒப்பிடும்போது 15 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு உயர்ந்து உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வரலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதாவது 15 சதவீதத்துக்கும் மேல் பரவல் உள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். எனவே அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு மத்திய அரசிடம் சுகாரத்துறை கூறியுள்ளது.

Also Read : ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்! வீட்டிலும் மாஸ்க் அணிய வேண்டுகோள்!

மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு கலந்து ஆலோசித்து விட்டு முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 15 சதவீதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருப்பதால் இந்த பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry