மக்களை மிரட்டும் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’! தப்பிப்பதற்கான பவர்ஃபுல் டிப்ஸ்! 

0
61
Digital arrest scams are on the rise, targeting unsuspecting individuals with threats of legal action and imprisonment. Learn how to recognize these scams, protect your personal information, and avoid falling victim to these cybercriminals.

பேஸ்புக்கில் உங்கள் பெயரில் போலியாக கணக்கைத் தொடங்கி உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணையவழி மோசடியாளர்கள் பணம் பறித்திருக்கிறார்களா? இப்போது ஃபேஸ்புக் வழியாக யாராவது பணம் கேட்டாலே, இது போலிக் கணக்கு என்று நினைக்கும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் பலரும் விழிப்புணர்வு பெற்றுவிட்டால், இணையவழி மோசடியாளர்கள் பேசாமல் இருந்துவிடுவார்களா? புதிது புதிதாக எப்படித் திருடலாம் என்றும் யோசிப்பார்கள். அப்படி அவர்கள் யோசித்ததன் விளைவுதான் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி. (Digital Arrest Scam).

அது என்ன டிஜிட்டல் அரெஸ்ட்? நம்முடைய நிறன்பேசியில் தொடர்புகொள்ளும் மர்ம நபரோ அல்லது தானியங்கி குரலோ, “உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பணமோசடி செய்யப்பட்டுள்ளது. உங்கள் சிம் கார்டு சேவையைத் துண்டிக்க உள்ளோம். உங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அதிகாரியுடன் பேசுங்கள். இந்த இணைப்பை, நான் அவருக்கு ஃபார்வோடு செய்கிறேன்’ என பதற்றத்தை ஏற்படுத்துவதுபோல் கூறும்; “உங்களை கைது செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது” எனவும் மிரட்டும்.

Also Read : மோசமான நிலையில் தமிழக சுகாதாரத்துறை! அமைச்சரின் நிர்வாகக் குளறுபடிகள், உளறல்கள், அந்தர்பல்டிகள் அதிகரிப்பு!

இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுவோர் கையில் எடுத்திருக்கும் புதிய மோசடி ஆயுதம் இது. இப்படித் தொடர்புகொள்வோர் தங்களை சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத் துறை என ஏதாவது ஒரு மத்திய அரசுத் துறையிலிருந்து பேசுவதாக உருட்டுவார்கள். பதற்றத்தோடு அவர்களுடன் நாம் பேசினால், நம் வாழ்நாள் சேமிப்பு வரை அனைத்தையும் உருவிவிடுவார்கள்.

இப்படி பயந்துபோய் மிரட்டல் பேர்வழிகளிடம் பேசியோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த விவரங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் ரூ.120 கோடியை இந்திய மக்கள் இப்படி இழந்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். எந்தக் குற்றமும் செய்யாதவர்களை மன ரீதியாக குற்றவாளியாக்கி இணையம் வழியாக கோடிக்கணக்கில் பணத்தைத் திருடும் இணையவழி மோசடியாளர்கள் இந்தியாவுக்குள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் இயங்குகிறார்கள்.

சைபர் குற்றங்களில் மிக முக்கிய மோசடியாக உள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், அதில் சிக்கிக்கொள்ளாமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கும் அளவு நிலைமை சென்றுகொண்டிருக்கிறது. சைபர் மோசடிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் மாணவர்களை ஈடுபடுத்துமாறு பள்ளி, கல்லூரிகளை வலியுறுத்தியுள்ள பிரதமர், சமூகத்தில் கூட்டு முயற்சியால் மட்டுமே இதுபோன்ற சவால்களை நாம் சமாளிக்க முடியும்”என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read : ஆபீஸ் பிரஷர், வீட்டு டென்ஷன்..! மனசும், உடலும் சோர்வா இருக்கா? புத்துணர்ச்சி பெற உதவும் சூப்பர் டிப்ஸ்!

பொதுவாகவே மோசடிகளில் இருந்து தப்பிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையவழியில் இயங்குபவர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும். இதிலிருந்து தப்பிக்க சில சில டிப்ஸ்:

  • அரசின் விசாரணை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ஒருபோதும் பணம் அல்லது வங்கி சார்ந்த விவரங்களை கேட்க மாட்டார்கள்.
  • உங்கள் ஃபோனை டிராய் துண்டிக்கப் போகிறது என்று அழைத்தால், அதைப் பொருட்படுத்தாதீர்கள்.
  • கைபேசி எண்போல அல்லாமல் FedEx எனப்படும் வாடிக்கையாளர் சேவை அழைப்பில் 1 அல்லது ஏதாவது வேறு எண்ணை அழுத்துமாறு கேட்டால், புறந்தள்ளுங்கள்.
  • காவல் அதிகாரி என்று அழைத்து உங்கள் ஆதார் எண் பற்றியெல்லாம் பேசினால், பதிலளிக்க வேண்டாம்.
  • உங்களை டிஜிட்டல் கைது செய்வதாகச் சொன்னால் பதற்றமடையாதீர்கள். அழைப்பிலிருந்து வெளியேறிவிடுங்கள்.
  • உங்களுக்கோ அல்லது உங்களால் அனுப்பப்பட்ட பார்சல்களில் மருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றோ சொன்னால் பதில் சொல்ல வேண்டாம்.
  • ஒருவேளை போனில் பேசுவோர், இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னால், உடனே சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினருக்கு 1930இல் தகவல் தெரிவியுங்கள்.
  • வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்புகொண்டால் பொருட்படுத்தாதீர்கள்.
  • யுபிஐ மூலம் உங்களுக்குத் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாகவும், அந்தப் பணத்தைத் திரும்ப அனுப்பும்படி போன் செய்தால், அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டாம்.
  • உணவு விநியோக நிறுவனங்களில் இருந்து அழைப்பதாகக் கூறி, 1 அல்லது வேறு ஏதாவது எண்ணை அழுத்தி, உங்க முகவரியை உறுதிப்படுத்தச் சொன்னால், அதை செய்யாதீர்கள்.
  • எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைபேசி வழியாக ஓடிபியை எவருடனும் பகிர வேண்டாம்.
  • வீடியோ அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம்.
  • நீல நிறத்தில் எழுதப்பட்ட எந்த இணையச்சுட்டியையும் அழுத்த வேண்டாம்.
  • புலனாய்வு அமைப்புகளின் பெயர்களில் உங்களுக்கு நோட்டீஸ் வந்தாலும், அதை சரிபார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • அரசு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்திற்கு WhatsApp அல்லது Skype போன்ற தளங்களைப் பயன்படுத்துவதில்லை.

Also Read : பைக் ஓட்டுவதால் முதுகு வலி வந்து அவதிப்படுறீங்களா? இந்த ட்ரிக்ஸை மறக்காம ஃபாலோ செய்தால் வலி பறந்துபோகும்!

நீங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்கு ஆளானால், முதல் வேலையாக உங்கள் வங்கியில் புகார் அளித்து கணக்கை முடக்க வேண்டும். தேசிய சைபர் கிரைம் புகார்களுக்கான cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும். மோசடி தொடர்பான எல்லா ஆதாரத்தையும் உங்களிடம் எப்போதும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, அழைப்புகள் வந்த விவரங்கள், பரிவர்த்தனை விவரங்கள், மெசேஜ்கள் போன்றவற்றை அழியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில், தேவைப்பட்டால் வழக்கறிஞரின் உதவியையும் நாடலாம்.

Image Source : Getty Image.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry