iPhone ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என எப்படி கண்டுபிடிக்கலாம்? சீரியல் நம்பர் F-ல் ஆரம்பித்தால்…!

0
680

ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ நாம் புதிதாக வாங்கும் ஐபோன் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எளிது.

விலை குறைவாகவும், ஆஃபரில் கிடைக்கிறது என்றும் ஏராளமானோர் ஆன்லைனில் ஐபோன் வாங்கிவிட்டு, அது ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என தெரியாமல், சந்தேகத்துடனேயே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சதந்தேகத்தை போக்குவதற்கான வழியைப் பார்க்கலாம்.

  • நீங்கள் ஐபோன் வாங்கியிருக்கிறீர்கள் என்றால், உடனடியாக அந்த ஐபோன் பாக்ஸை திறக்காமல், பாக்ஸில் இருக்கும் IMEI எண்ணை எடுத்து, https://checkcoverage.apple.com/in/en-ல் பதிவிட்டால், அது உண்மையான ஐபோன் தானான் என்பதை தெரிவிக்கும். அதேபோல், ஃபோனின் சீரியல் எண்ணை https://selfsolve.apple.com/agreementWarrantyDynamic.doல் பதிவிட்டால் ஒரிஜினலா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும். (சீரியல் நம்பர் பாக்சில் அச்சிடப்பட்டிருக்கும், அல்லது ஃபோனில் கண்டுபிடிக்க: Settings-> General-> About)
  • ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் Lightning port-ஐ பாதுகாக்க Pentalobe Screwகளை பயன்படுத்தும். இது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், போலியான ஃபோன் என்பதை கண்டறியலாம்.

  • மாடல் எண்ணின் முதல் எழுத்தை வைத்து, அந்த ஃபோன் புதிதா, புதுப்பிக்கப்பட்டதா? என்பதை கண்டறிய முடியும். M என்று தொடங்கினால் (உதாரணமாக MN572LL/A) அது புதிய ஃபோன். மாடல் எண் F என்று தொடங்கினால், அது, Refurbishing Process செய்யப்பட்டது, அதாவது புதுப்பிக்கப்பட்டதாகும். N என்று தொடங்கினால், அது, Replacement Device என்பதைக் குறிக்கும். P என்று இருந்தால் அது Personalized Devie ஆகும். அதாவது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. (Settings-> General-> About). எனவே M என்று சீரியலில் தொடங்கும் ஃபோன்களையே வாங்குகங்கள்.
  • ஒரு ஐபோனை நாம் முதல் முறையாக பயன்படுத்தும் போது, அதில் ஆப்பிள் ஐடி கணக்கை தான் பயன்படுத்த சொல்லும். அதைத் தவிர Google அல்லது பிற கணக்கைப் பார்க்கும்படி உங்களைத் தூண்டினால் அது ஒரு போலி ஐபோன். அதுமட்டுமின்றி, நீங்கள் வாங்கியிருக்கும் ஐபோனில் ஆப் ஸ்டோர் செல்லும் போது Apple App Store இருந்தால், அது உண்மையான போன், அதுவே Google Play Store அல்லது வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோரைப் பார்த்தால் அது போலியானது.

  • நீங்கள் வைத்திருக்கும் ஐபோனின் power button-ஐ தொடர்ந்து அழுத்தி பிடியுங்கள். அப்போது Siri தோன்றினால், உங்கள் ஐபோன் உண்மையானது. அதற்கு பதிலாக கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா அல்லது வேறு ஏதேனும் குரல் உதவி கேட்டால், அது போலியானது என்பதை உறுதி செய்யலாம்.   
  • ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என அறிய, ஃபோன் பாக்ஸில் இருக்கும் தகவல்களையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம். பாக்ஸின் பின்புறம், மாடல் எண், சீரியல் எண், IMEI உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். பாக்சில் இருக்கும் இந்த எண்களும், ஃபோனில் Settings->General->About –ல் டிஸ்பிளே ஆகும் எண்களும் ஒத்துப்போகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஒரிஜினில் ஐ போன் பாக்ஸின் பின்புறம், Designed by Apple in California Assembled in Chinaஎன இருக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*