சுவையான பாலக் பன்னீர் சப்பாத்தி செய்வது எப்படி? Palak Paneer Chapati Recipe!

0
36
Elevate your mealtime with this delectable Palak Paneer Stuffed Chapati recipe. Packed with the goodness of spinach and paneer, these flavourful flatbreads are perfect for a quick and healthy meal. Follow our easy-to-follow steps to create a restaurant-quality dish right at home.

விதவிதமான சப்பாத்தி வகைகளில் பாலக் பன்னீர் சப்பாத்தி ரொம்பவே டேஸ்ட்டியாகவும், அனைவரும் விரும்பும் வகையிலும் இருக்கும், சுலபமாக மற்றும் வித்தியாசமான வகையில் செய்து கொடுத்து அசத்தக் கூடிய இந்த பாலக் பன்னீர் சப்பாத்தியை வீட்டிலேயே செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Also Read : குக்கர் சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? மறந்தும் இந்த 6 உணவுகளை குக்கர்ல சமைச்சுடாதீங்க!

பாலக் பன்னீர் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:

  • பாலக்கீரை – ஒரு கட்டு
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • கோதுமை மாவு – ஒன்றரை கப்
  • உப்பு – தேவையான அளவு
  • ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்கள்:
  • பன்னீர் – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
  • சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
  • கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
  • கஸ்தூரி மேத்தி – அரை ஸ்பூன்
  • ஓமம் – அரை ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு
  • எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவைக்கு ஏற்ப

பாலக் பன்னீர் சப்பாத்தி செய்முறை விளக்கம்:

முதலில் ஒன்றரை கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள். அதில் ஒரு இரண்டு நிமிடம் மட்டும் பாலக் கீரையை போட்டு கூடவே ஒரு பச்சை மிளகாயையும் சேர்த்து வேகவிட்டு எடுத்து விடுங்கள், இதனால் நச்சுக்கிருமிகள் அழியும்.

பின்னர் கீரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த கீரை பேஸ்ட்டை கோதுமை மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்ததும், கொஞ்சம் எண்ணெய் தடவி அப்படியே மூடி போட்டு ஊற விடுங்கள். அதற்குள் ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு பன்னீரை முதலில் ஒரு பவுலில் துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.

துருவிய பன்னீருடன் மிளகாய் தூள், கரம் மசாலாத் தூள், சீரகத் தூள், கொஞ்சம் போல உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பின்னர் காய்ந்த வெந்தயக் கீரை அதாவது கஸ்தூரி மேத்தியை நன்கு கைகளால் கசக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஓமம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் விரும்பாதவர்கள் இதனை தவிர்க்கலாம். பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி ஒரு முறை நன்கு கலந்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Also Read : குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா? Cold Shower Benefits in Winter!

ஊற வைத்த மாவை சப்பாத்திக்கு தேய்ப்பது போல நீள வடிவில் தேய்த்து நடுவில் இந்த ஸ்டஃபிங் செய்ய வேண்டிய பொருளை கொஞ்சம் போல வைத்து, இரண்டாக மடித்து கொள்ளுங்கள். பின்னர் வட்டமாக சப்பாத்தியை தேய்த்து சுடச்சுட தோசை கல்லில் போட்டு இருபுறமும் சிவக்க வறுத்து எடுக்க வேண்டியது தான். மேலே எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். சுவையான பாலக் பன்னீர் சப்பாத்தி ரெடி.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry