கரப்பான் பூச்சியில் கிட்டத்தட்ட 1,300 வகைகள் உள்ளன. இவற்றில் 30 வகைகள் மட்டுமே தங்களது வாழ்வாதாரத்திற்காக மனிதர்களைச் சார்ந்து உள்ளன. மீதமுள்ளவக காடுகள் போன்ற மனிதரற்ற பகுதிகளில் காணப்படுகின்றன. பூமி பல்வேறு பேரழிவுகளைச் சந்தித்தப்போதும் கரப்பான் பூச்சி இனம் அதில் இருந்து தங்களைத் தற்காத்து வந்துள்ளன. கரப்பான் பூச்சிகள் 300-350 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உள்ளன.
Also Read : குக்கர் சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? மறந்தும் இந்த 6 உணவுகளை குக்கர்ல சமைச்சுடாதீங்க!
நாம் எவ்வளவுதான் சுத்தமாக வீட்டை வைத்திருந்தாலும் பல்லிகளும், கரப்பான் பூச்சிகளும் எப்படியோ வந்துவிடுகின்றன. அதுவும் மழைக்காலங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. வீட்டிற்குள் வரும் பல்லி, கரப்பான் பூச்சிகளை விரட்டுவது மிகப்பெரிய டாஸ்க்காக இருக்கிறது. மழைக்காலங்களில் உங்கள் வீட்டுத் தரையை சுத்தம் செய்யும்போது, அந்தத் தண்ணீரில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம், கரப்பான் பூச்சி, எறும்பு மற்றும் பல்லி போன்றவற்றை எளிதாக விரட்டலாம்.
வீடுகளைச் சுற்றி ஈரப்பதம் அதிகரித்த உடனேயே, வீட்டின் மூலைகளில் கரப்பான் பூச்சிகள் ஒவ்வொன்றாக படையெடுக்க ஆரம்பித்துவிடுகின்றன. குறிப்பாக சமையலறை சிங்க் மற்றும் குளியலறை, கழிவறையில், அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன. எவ்வளவோ விரட்டியடித்தாலும் இரவெல்லாம் நம் வீட்டிற்குள் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றால் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. உங்கள் வீட்டையும், சமையலறையையும் எப்போதெல்லாம் சுத்தம் செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளைத் தடுக்க உதவும் இந்தப் பொருட்களை தண்ணீரில் சேர்த்து தரையை துடைக்கவும்.
வினிகர் மற்றும் பேக்கிங் பவுடர்: ஒரு கப் வினிகரை நிரப்பி அதில் இரண்டு மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். இப்போது இந்த கரைசலை தண்ணீரில் தரையை மாப் வைத்து துடைக்கும் நீரில் நன்றாக கலக்கவும். இந்த தண்ணீரை பயன்படுத்தி தரையை சுத்தம் செய்தவுடன் பூச்சிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகள் போன்ற எந்த தொந்தரவும் இருக்காது.
உப்பு மற்றும் எலுமிச்சை: தரையை துடைக்க பயன்படுத்தும் தண்ணீரில் நான்கைந்து ஸ்பூன் உப்பு சேர்த்து, அதில் இரண்டு எலுமிச்சைப் பழங்களைப் பிழிந்து நன்றாக கலக்கவும். இப்போது இந்த கரைசலை சுத்தம் செய்ய பயன்படுத்தவும். இந்த கரைசலை தரையிலும், சுவர்கள் மற்றும் தளவாடங்கள் போன்றவற்றிலும் துடைக்க பயன்படுத்தலாம். இதனால் உங்கள் அறை பளபளப்பாக இருப்பது மட்டுமின்றி கரப்பான் பூச்சிகளின் தொல்லையும் நீங்கும்.
கற்பூரம் மற்றும் கிராம்பு: ஒரு கப் தண்ணீரில், 5 முதல் 6 கற்பூரத்தை நன்றாகப் பொடி செய்து அதில் கிராம்பு எண்ணெய் சேர்க்கவும். இப்போது இந்த கரைசலை தண்ணீரில் கலந்து தரையை துடைக்கவும். அதன் வலுவான வாசனை மழைக்கால பூச்சிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளை வீட்டிலிருந்து விரட்டும்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry