புதிய சிக்கலில் நயன்தாரா-விக்கி! மனித உரிமைகள் ஆணையத்தில் திடீர் வழக்கு!

0
218

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கடந்த 9-ம் தேதி நடந்தது. திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர். இதன் பின்னர் இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது, நடத்தப்பட்ட போட்டோஷூட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது, நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி காலணிகள் அணிந்து வந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே, நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, மகாபலிபுரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்க மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் கடற்கரைக்கே செல்ல இயலாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடற்கரை பொது இடம் என்ற நிலையில், நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடந்த ஜுன் 9-ம் தேதி அன்று கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry