மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா? மாம்பழம் கிடைக்கும் காலத்தில் வைட்டமின்-ஏ சேமித்து வையுங்கள்! 

0
101

மாம்பழங்களில் சுமார் 500 வகைகள் உள்ளன. இந்தப் பழங்களில் பல்வேறு சத்துகள், நன்மைகள் உள்ளன. ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகப்படுத்த உதவும் வைட்டமின்மாம்பழத்தில் மிகுதியாக இருக்கிறது.

மாமரம் உஷ்ணப் பிரதேசங்களில் வளருகிறது. இதன் தாயகம் இந்தியா. தமிழகத்தில் முக்கனி எனப் புகழப்படும் மா, பலா, வாழைப் பழங்களில் மாம்பழமும் ஒன்று. பழங்களில் இது மிகவும் ருசிகரமானதும், வாசனையுள்ளதுமாகும். இப்பழத்தில் அதிக மோகம் கொண்ட அக்பர் சக்கரவர்த்தி, தர்பங்கா பக்கத்தில்லட்சபாக்என்ற தோட்டத்தில் ஒரு லட்சம் மாமரங்களை நட்டார் என்றும், அவை சுமார் 300 ஆண்டுகள் வரையில் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

மாம்பழங்களில் சுமார் 500 வகைகள் உள்ளன. பெரும்பாலான பழங்கள் மஞ்சள் நிறமுடையன. மாமரங்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் பயிராகின்றன. பெரிய வகைப்பழம் சுமார் ஒரு அடி நீளமும் நாலைந்து பவுண்டு எடையுள்ளதாகவும் இருக்கும். சுவை மட்டுமின்றி இப்பழங்களில் ஆரோக்கியத்திற்கான பல சத்துப் பொருள்களும் அடங்கியுள்ளன. இதில் சிறிதளவு சிட்ரிக் அமிலம் (Citric acid) உள்ளது. அது உடம்பிலுள்ள காரச்சத்தைப் பாதுகாக்கப் பயன்படுகிறது.

மாம்பழத்தில் வைட்டமின்மிகுதியாக உள்ளது. 100 கிராம் பழத்தில் 4800 IU உள்ளது. இது போன்ற விகிதம் வேறு எந்தப் பழத்திலும் கிடையாது. வெண்ணெயில் உள்ள அளவு வைட்டமின்இப்பழத்திலும் காணப்படுகிறது. ஒருமனிதனுக்கு தினசரி 5000 IU வைட்டமின்தேவைப்படுகிறது. அதை 100 கிராம் மாம்பழத்திலிருந்து எளிதாகப் பெறலாம். வைட்டமின்உடம்பில் சேமித்து வைக்கப்படுவதால் அதை மாம்பழம் கிடைக்கும் காலத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். உடல் நலம் பெறவும், ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகப்படுத்தவும் வைட்டமின்இன்றியமையாதது.

கண்பார்வையை தெளிவாக்கவும், நிலைத்து நிற்கச் செய்யவும் இப்பழம் உறுதுணையாக உள்ளது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஒரு ஆப்பிள் பழத்தில் காணப்படுவதை விட நான்கு மடங்கு வைட்டமின்சிமாம்பழத்தில் உள்ளது. மேலும்நியாசின்’, ‘ரிபோஃப்ளேவின்போன்ற சத்துப் பொருள்கள் இதில் அடங்கியுள்ளன என்று தெரிகிறது. உடம்பின் எடையை அதிகப்படுத்த இப்பழம் பயன்படுகிறது என மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.

காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளிலும் இப்பழத்தைச் சாப்பிடலாம்; அதன் பின்னர் பாலை அருந்துவதால் அதிக பலனை அடையலாம். ஏனெனில் மாம்பழத்தில் அதிக புரதச்சத்து இல்லை; பாலில் அதிக மாவுச்சத்து இல்லை. மாம்பழத்தில் அதிக மாவுச்சத்து இருப்பதாலும் பாலில் அதிக புரதச்சத்து இருப்பதாலும் மாம்பழத்தைச் சாப்பிட்ட பின் பால் அருந்துவதால் அவை இரண்டும் சேர்ந்து முழு உணவாகிறது.

ஒரு மாத காலம் மாம்பழமும் பாலும் சேர்ந்து உண்டால் உடலில் நல்ல பலமும் எடையும், சக்தியும் உண்டாகும். மேலும் தேனையும் கலந்து உண்டால் மிக அதிகப்பலனை அடையலாம். மாம்பழத்தை மிதமாக உண்பதால் மலமிளக்கம் ஏற்படலாம். நன்கு பழுத்தபழம் இதயத்திற்குப் புத்துயிர் அளிக்கிறது; உடலின் நிறத்தை விருத்தி செய்கிறது; பசியைத் தூண்டுகிறது; கல்லீரல் குறைபாடுகளைப் போக்குகிறது.

மாம்பழத் தோலிலும் வைட்டமின்சிசத்து அடங்கியுள்ளது. சதைப்பாகத்தில் இருப்பது போன்று சமபாகம் தோலிலும் உள்ளது. எனவே பழத்தோலை சாப்பிடலாம். பச்சை மாங்காயில், பழத்தைவிட வைட்டமின்சிஅதிகம் உள்ளது. மாங்காயை வேக வைத்தாலும் அது கெடுவதில்லை. அதிலுள்ள சிட்ரிக் அமிலம் வைட்டமின்சியைப் பாதுகாக்கின்றது.

100 கிராம் எடையுள்ள மாம்பிஞ்சில் 42 முதல் 188 மி.கி. வரையும், அரைக்காயில் 25 முதல் 154 மி.கி. வரையும், பழத்தில் 14 முதல் 119 மி.கி. வரையும் விட்டமின்சிசத்து உள்ளது. மாம்பிஞ்சும், காயும் ஊறுகாயாகப் பயன்படுத்தப்படுகிறது. பழத்திலிருந்து சாறு பிழிந்து பத்திரப்படுத்துகிறார்கள். மாவற்றல் வருடம் பூராவும் பயன்படுகிறது. நார் இல்லாத பழங்களே புசிப்பதற்குத் தகுந்தவை. நார் இருந்தால் அதை நீக்கிவிடவேண்டும்; ஏனெனில் நார் எளிதில் ஜீரணமாவதில்லை. பழம் முதிர்வதற்கு முன்னரே அதை மரத்திலிருந்து இறக்கி விடுவதால் வைட்டமின்குறைவதில்லை. பழம் ஆகும் போது 75 முதல் 179 மி.கி. வரை வைட்டமின்அதிகப்படுகிறது. சுமாரான பழத்தில் 24 மணி நேரத்திற்கு 1200 மி.கி. கரோட்டின் உண்டாகிறது. மாம்பழத்தைச் சாப்பிடுமுன் அதை நன்கு கழுவி, காம்பை அகற்றிவிட வேண்டும். அவ்வாறின்றி அவசரமாகச் சாப்பிடுவதால் உடம்பிற்கு கெடுதல் ஏற்படும்.

மாம்பழத்தை அப்பமாகச் செய்து பத்திரப்படுத்தலாம். மற்ற பழங்களுடன் சேர்த்து கிச்சடி (Salad) செய்து சாப்பிடலாம். சாறு பிழிந்து சர்ப்பத்தாகவும் பத்திரப்படுத்திப் பயன்படுத்தலாம். சில வியாதிகளுக்கு பழம், இலை, பூ முதலியவற்றை மருந்தாகவும் கொடுக்கலாம். மாம்பழத்தின் தோலை பாலில் நன்கு அரைத்து தேனுடன் கலந்து கொடுக்க இரத்த சீதபேதி நீங்கும்.

மாங்காய் தோலை நெய்யில் வறுத்து, சர்க்கரையுடன் கலந்து உண்பதால் மாதவிடாய் ஒழுங்குபடும். மாவிலைச் சாம்பலை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உபயோகிக்க எரிபுண்கள் சரியாகும். இலையிலிருந்து வரும் பால் போன்ற சாறை கால் வெடிப்புக்கு மருந்தாக உபயோகிக்கலாம். சீதபேதி, வயிற்றோட்டம், மூலநோய், வெள்ளை, மேகம் போன்றவற்றுக்கு மா மரத்தின் உலர்ந்த பூக்களைப் பயன்படுத்தலாம். மா இலைச்சாறு எடுத்து அரைப்பாகம் தேனுடனும், கால்பாகம் பாலுடனும், கால்பாகம் நெய்யுடனும் கலந்து இரத்த சீதபேதிக்கு கொடுக்கலாம்.

நன்றிவீ.சேரந்தையாபிள்ளை, பி..பி.டி.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry