புதுச்சேரியில், உச்ச கட்ட குழப்பத்தில் பாஜக கூட்டணி! சொந்த செல்வாக்கால் முன்னேறும் திமுக – காங்கிரஸ் வேட்பாளர்கள்!

0
48

புதுச்சேரியில் பாஜகஅதிமுக கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்தக் கூட்டணி வேட்பாளர்கள் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாமக-வுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தமது கட்சி போட்டியிடும் தொகுதிகளில் உள்ள முக்கியத் தலைவர்களை சந்தித்து தனியாக ஆதரவு கோரி வருகிறார். 

இதேபோல், அதிமுக மற்றும் பாஜக தரப்பில் தனித்தனியே பிரச்சாரம் செய்கின்றனர். தொகுதிப் பங்கீட்டின்போது ஏற்பட்ட பிணக்கு, பாஜக கூட்டணியில் இன்னமும் நீடிக்கவே செய்கிறது. இதுகுறித்து, வாக்காளர்கள் சிலரிடம் பேசினோம். அப்போது அவர்கள், “யார் ஆட்சி அமைப்பாளர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணியில் பிரச்சனை உள்ளது. அதிமுக-பாஜக.வை ஒரு அணியாகவும், என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாகவும்தான் நாங்கள் கருதுகிறோம். மத்திய பாஜக அரசால் பல இன்னல்களை சந்திக்கிறோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என மக்களை மோடி அரசு வதைக்கிறது. இதை நாங்கள் மறக்கமாட்டோம்.

தமிழ்நாடு, புதுச்சேரியைப் பொறுத்தவரை, அதிமுக-வை முழுவதுமாக இயக்குவது பாஜக-தான்.  ரங்கசாமி, கூட்டணிக்கு விருப்பம் இல்லாமல்தான் இருந்தார். ஆனால், மத்திய அரசு மறைமுக அழுத்தம் கொடுத்துதான் அவரை கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது. பாஜக எதிர்ப்பு என்பதில், தமிழ்நாட்டைப் போலத்தான் புதுச்சேரியும். எனவே, பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். ஏனென்றால் எங்களைப் பொறுத்தவரை இது பாஜக-அதிமுக கூட்டணிதான்” என்று அவர்கள் கூறினார்கள்.

மக்களிடையே நிலவும் பாஜக எதிர்ப்பு மன நிலையால், அதிமுக வாக்குகளை இழக்கும் சூழலில், பாஜக-என்.ஆர். காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஆனால், ரங்கசாமி அதற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என பாஜக அறிவித்தது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, “கூட்டணியில் முதல்வர் பதவி கிடைக்குமா, தருவார்களா என்ற சிறு குழப்பங்கள், கேள்விகள் எழுப்புகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ்தான் தலைமை வகிக்கிறது. முதலமைச்சர் யார் என்ற குழப்பத்துக்கு வேலையில்லைஎன்று தெரிவித்தார். வாக்குப்பதிவே நடக்காத நிலையில், ரங்கசாமியா?, நமச்சிவாயமா? யார் முதலமைச்சர் என்பதில், அதிமுக-பாஜக கூட்டணி கட்சியின் மீண்டும் மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதேநேரம், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில், தங்கள் கட்சியினரையே சுயேட்சைகளாக ரங்கசாமி நிறுத்தியிருப்பதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம்சாட்டுகிறது

இதனூடே, அதிமுகபாஜக கூட்டணியில் நிலவும் குழப்பம், திமுககாங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக மாறிவருவதாக தெரிகிறது. திமுககாங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், தங்களது கட்சியையும், ஆதரவாளர்களையும் நம்பி களமாடுகின்றனர். சொந்த செல்வாக்கால் இவர்கள் ரேஸில் முந்துகின்றனர் என்றே சொல்லலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry