ஆவின் பால் பாக்கெட்டில் ‘ஈ’! பேக்கிங்கில் தவறு நடந்திருக்கலாம் என நிர்வாகம் விளக்கம்! நுகர்வோர் அதிர்ச்சி!

0
63

மதுரையில், ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பால் பாக்கெட்டிற்குள் ஈ கிடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

மதுரை ஆவின் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள், நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேல் தயாரிக்கப் படுகின்றன. இவை, 40க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெப்போக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.

Also Read : ஆ.ராசாவுக்கு பகிரங்க மிரட்டல்! கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது! நிர்வாகிகள் மறியல்!

அதில், ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட, 33வது வழித்தடத்தில் பால் வேன் மூலம் நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை, கீழமாத்தூர் உள்ளிட்ட டெப்போக்களில் பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டன. மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு அருகே உள்ள டெப்போவில், அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற பாக்கெட் வாங்கிய பெண் ஒருவர், பால் பாக்கெட்டிற்குள், ‘ஈ’ இறந்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் பால் பாக்கெட்டில் ஈ மிதப்பதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த பால் பாக்கெட் டெப்போவிலேயே திருப்பி அளிக்கப்பட்டது.  இதுபற்ற தகவல் அறிந்து டெப்போவிற்கு சென்ற ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தற்போது அந்த வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஆவின் நிர்வாகம் பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்கலாம் எனவும், பணியில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry