
நம்மில் பலர் தனிமையில் இருக்கும் போது செய்யும் விஷயங்கள் குறித்து பொது வெளியில் பேச மாட்டோம். அப்படிபட்ட விஷயங்களுள் ஒன்று, குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம். பலரும் இது குறித்து பேசுவதில்லை என்பதற்காக இது யாருக்கும் இல்லாத பழக்கம் என்றாகிவிடாது.
ரிலாக்ஸாக ஒரு நாள் குளித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படி ஏற்படுகையில், தனியாக சென்று சிறுநீர் கழிப்பதற்கு பதிலாக அப்படியே கழித்துவிடுவோம். இது நல்ல பழக்கமா?
Also Read : காலையில் டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? அச்சுறுத்தும் உண்மை..!
குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது சுத்தமானதா? சுகாதாரமானதா? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்றும் பயப்படுகின்றனர். குளிக்கும்போது சிறுநீர் கழிப்பது எந்த நோயின் அறிகுறியல்ல. உண்மையில் இந்த பழக்கத்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்கின்றனர் ஒரு தரப்பு மருத்துவர்கள். ஆனால், இதை நம் வீட்டில் உள்ள கழிவறையில் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும் பொது கழிப்பிடத்தில் இது போன்று செய்தால்தான் நம் உடலில் பிரச்சனைகள் ஏற்படும் என்பது ஒரு சில மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.
அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. அத்லெட்டுகள் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.

குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் நல்ல விஷயம் என்கிறார்கள்சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.
எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.
Disclaimer: This information is for general knowledge and informational purposes only and does not constitute medical advice. Always consult with a healthcare professional for any health concerns.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry