வேட்பாளர்கள் குவிவதால் ரங்கசாமி அலட்சியம்! RTO சரவணனுக்கு வலை விரிக்கிறது பாஜக!

0
13

மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய நபர்கள் அதிக அளவில் வருவதால், ரங்கசாமி வேட்பாளர்கள் தேர்வில் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, என்.ஆர். காங்கிரஸில் உள்ள அதிருப்தியாளர்களை தன் வசம் ஈர்ப்பதற்கான வேலைகளை பாஜக தொடங்கிவிட்டது.

காங்கிரஸில் இருந்து லட்சுமி நாராயணன், ஏகேடி ஆறுமுகம் போன்ற முக்கிய நிர்வாகிகள் என். ஆர். காங்கிரஸில் இணைந்துள்ளனர். அதேபோல், தொகுதிகளில் செல்வாக்கு மிக்க நபர்கள் சிலரும் ரங்கசாமியிடம் ஐக்கியமாகி வருகின்றனர். இந்நிலையில், என்.ஆர். காங்கிரஸ் தனித்து களம் இறங்குவது ஏறக்குறைய உறுதியான நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் ரங்கசாமியின் விசுவாசிகளை கட்சிக்குள் கொண்டுவரும் பணியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

RTO Saravanan

அதன் ஒரு பகுதியாக, ரங்கசாமியின் தீவிர ஆதரவாளரான, மங்கலம் தொகுதியைச் சேர்ந்த சரவணன் என்கிற தில்லை சபாபதிக்கு பாஜக வலைவீசியுள்ளதாக தெரிகிறது. இவர் தொகுதி மக்களால் RTO சரவணன் என்று அறியப்படுகிறார். ரங்கசாமியின் மீது கொண்ட பற்றின் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ரங்கசாமியின் பிறந்தநாளுக்கு அதிக அளவில் சுவர் விளம்பரங்கள் எழுதுவது, பேனர் வைப்பது என்று இவர் அமர்க்களப்படுத்துவார்.

மங்கலம் தொகுதியில் RTO சரவணனை, ரங்கசாமி கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதையறிந்த பாஜக, மங்கலம் தொகுதிக்கு பாஜக சார்பில் ஆர்.டி.. சரவணனை நிறுத்தலாம் என திட்டமிடுகிறது.

இதற்காக சரவணனுக்கு பாஜக வலை வீசுவதாகத் தெரிகிறது. பாஜகவின் மங்கலம் தொகுதி பொறுப்பாளர் சரவணன் வீட்டில்தான் தங்கி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. RTO சரவணனை, ரங்கசாமி தக்கவைத்துக்கொள்வாரா? அல்லது பாஜக சரவணனை இழுத்துவிடுமா என்பதே மங்கலம் தொகுதி அரசியல் பிரமுகர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் விவாதப்பொருளாகி உள்ளது

இந்நிலையில், ரங்கசாமிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, அனைத்து தொகுதிகளுக்கும் மாற்று கட்சியிலிருந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு, தேர்தலில் போட்டியிட தகுதியான நபர்கள் அதிக அளவில் சேர்ந்துவிட்டனர். எனவே இனி யாரும் கட்சிக்கு வர வேண்டாம் என ரங்கசாமி கூறுகிறார்

மாற்றுக்கட்சியினர் வந்தாலும், இத்தனை நாள் கட்சிக்காக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உழைத்த தொண்டர்களை அலட்சியப்படுத்தாமல், அவர்களையும் திருப்திப்படுத்த என்.ஆர். முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்து என்.ஆர். மற்றும் கட்சிக்காக உழைப்பவர்களை, புதியவர்களோடு,   ஒப்பிட்டு குறைத்து மதிப்பிடக்கூடாதுஎன்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry