சசிகலாவை குற்றம் சுமத்தும் ஆறுமுகசாமி ஆணையம்! ஜெ.வைக் காப்பாற்றியிருக்க முடியும்! பரபரப்புத் தகவல்கள்!

0
117

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை சந்தேகிப்பதாக ஆணையம் கூறியுள்ளது.

மேலும், சசிகலா, மருத்துவர் சிவக்குமார், சி. விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் ரெட்டி ஆகியோரையை விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
* எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை
* சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை. கிருஷ்ணப் பிரியாவின் சாட்சியத்தின்படி இது உறுதியாக தெரய வருகிறது.
* சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.
* அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.
* ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் சசிகலா தடுத்துள்ளார்.
* சசிகலா – ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம்.
* 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது
* சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் இருக்கலாம்.

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை ஏற்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும்கூட, ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

ஆனால் அதன்பிறகு ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை பற்றிய தகவல்கள் எல்லாம் சசிகலாவால் ரகசியம் ஆக்கப்பட்டுள்ளது. சசிகலா – ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சசிகலாவை குற்றம் சுமத்துவதை விடுத்து, வேறெந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

Also Read : எண்ணும் எழுத்தும் பாடப்புத்தக அட்டையில் இரட்டை இலை சின்னம், காவி வண்ணம்! அதிகாரிகள் திட்டமிட்டு வெளியிட்டனரா என கேள்வி?

ஜெயலலிதாவுக்கு வெஜிடேசன், குடல்நோய் அறிகுறி உபாதைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை. இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும். மருத்துவமனையின் 10 அறைகள் சசிகலா உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற பொய்யான அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டு உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry