இடைத்தரகர்களை ஒழித்துவிட்டு, விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை நேரடியாக தொழில் நிறுவனங்களில் விற்க வேண்டும், என மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் ஒருமாதமாக போராடி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இடைத்தரகர்கள் என்றும், எதிர்க்கட்சி வேளாண் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆளும்கட்சி கூறுகிறது. இந்த போராட்டத்துக்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் காரணம், வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிறுத்திவிடும் என்பது. இவ்வாறு வேளாண் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இரண்டாவது, சந்தையில் இடைத்தரகர்களை அனுமதிக்க வேண்டும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க்கக்கூடாது என்பதாகும். இடைத்தரகர்களால்தான் வேளாண்குடிகளுக்கு உரிய உற்பத்தி விலை கிடைக்கவில்லை, விலை நிர்ணயத்தில் தில்லுமுல்லு நடக்கிறது. எனவேதான், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய வேளாண் சட்டம் வகை செய்கிறது.
இதே கருத்தை மையமாக வைத்து, மக்களவையில் 2015-ம் ஆண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதை, பாஜக தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ராகுல் பேசியதாவது: “நாங்கள் கிலோ 2 ரூபாய்க்கு உருளைக்கிழங்கை விற்கும்போது, எங்கள் குழந்தைகள், ஒரு உருளைக்கிழங்கை சிப்ஸாக தயாரித்து பாக்கெட்டில் அடைத்து பத்து ரூபாய்க்கு விற்பதை வாங்க வேண்டிய நிலை உள்ளது. இது ஏன் என்று கேட்டபோது, நாங்கள் விளைவித்த பொருளை, தொழிற்சாலைகளுக்கு நேரடியாக விற்க முடியவில்லை. நாங்கள் விளைவிக்கும் பொருளை, இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக தொழிற்சாலைகளுக்கு விற்கும் வழிமுறை இருந்தால், எங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று கூறினார்”.” எனபேசியுள்ளார்.
ये क्या जादू हो रहा है राहुल जी?
पहले आप जिस चीज़ की वकालत कर रहे थे, अब उसका ही विरोध कर रहे है।
देश हित, किसान हित से आपका कुछ
लेना-देना नही है।आपको सिर्फ़ राजनीति करनी है।लेकिन आपका दुर्भाग्य है कि अब आपका पाखंड नही चलेगा। देश की जनता और किसान आपका दोहरा चरित्र जान चुके है। pic.twitter.com/Uu2mDfBuIT— Jagat Prakash Nadda (@JPNadda) December 27, 2020
இந்த வீடியோவை வெளியிட்டு கருத்து பதிவிட்டுள்ள பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, “என்ன மாயம் நடந்தது ராகுல். முன்னர் எதற்காக வாதாடினீர்களோ, தற்போது அதனை எதிர்த்து வருகிறீர்கள். நாடு மற்றும் விவசாயிகள் நலனுக்காக நீங்கள் எதுவும் செய்தது இல்லை. அரசியல் மட்டும் செய்கிறீர்கள். உங்களின் துரதிர்ஷ்டம், உங்களின் போலித்தனம் வேலை செய்யவில்லை. உங்களின் இரட்டை வேடத்தை நாட்டு மக்களும், விவசாயிகளும் புரிந்து கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry