வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்த ரஜினி, தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அறிவித்து, ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்று முழக்கமிட்ட ரஜினி, ‘#இப்போதும்_இல்லை_எப்போதும்_இல்லை’ என்று தெளிவாக சொல்லிவிட்டார். இதன் பின்னணி என்ன? உண்மையிலேயே உடல்நலன்தான் காரணமா? எந்தக் கட்சி அவரை வரவிடாமல் தடுத்தது? என்பது பற்றி விரைவில் பார்க்கலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry