விஜய் கோரிக்கையை ஏற்றார் EPS! ஜனவரி 13-ல் மாஸ்டர் ரிலீஸ்! படக்குழு அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

0
6

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், அனைத்து மொழிகளிலும் ஜனவரி 13-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள் படத்தின் டீசரையாவது வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. மாஸ்டர் படத்தின் டீசர் தற்போது 5 கோடி பார்வையாளர்களை பெற்று யூடியூபில் சாதனை படைத்துள்ளது. அதேபோல் அதிகம்பேர் கமென்ட் செய்த சாதனையையும் பெற்றுள்ளது.

Also Read : சாதனை படைத்து வரும் மாஸ்டர் டீசர்! இணையத்தை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும், பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது . இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஒடிடி நிறுவனங்கள் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டிய போதும் படத்தின் தயாரிப்பாளர் லலித் படத்தை திரையரங்கில் வெளியிடுவதில் உறுதியாக இருந்தார். தமிழகத் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 100% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில் அண்மையில் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விஜய் நேரடியாக சந்தித்து இதற்கான கோரிக்கையை முன்வைத்தார். நடிகர் விஜய்யின் கோரிக்கை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry