புயல் நிவாரணப் பணிகளில் வழக்கறிஞர் சம்பத்! தொகுதி முழுவதும் களப்பணி! உணர்வுப்பூர்வமாக பாராட்டும் மக்கள்!

0
55

நிவர் புயல் புதுச்சேரிமரக்காணம் இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலாம் சேவை மையம் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரியில் நிவர் புயல் கரையை கடந்ததன் காரணமாக பெய்த கனமழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கன மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினர். வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. முதலமைச்சர் நாராயணசாமி வசிக்கும் எல்லையம்மன் கோயில் வீதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், பலத்த காற்றும் கன மழை காரணமாக முதலியார்பேட்டை தொகுதியில், பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதுடன், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அடைப்பு காரணமாக கால்வாய்களில் இருந்து கழிவுநீர் சாலைகளில் வரத்தொடங்கின.  இதன்காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்துள்ள நிலையில், தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சமைக்க இயலாமல், பலரும் உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதுஇதையடுத்து கலாம் சேவை மைய நிறுவனரும், வழக்கறிஞருமான சம்பத், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் களத்தில் இறங்கினார்.

வெளி ஆட்களை அழைக்காமல், இயந்திரங்கள் உதவியின்றி, சாய்ந்துகிடந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அதேபோல், கயிறு கட்டி கால்வாயில் இறங்கிய கலாம் சேவை மையத்தினர் அடைப்புகளை சரிசெய்தனர். சமைக்க முடியாத பகுதிகளில், காலையில் பிரட்டும், மதியம் உணவுப்பொட்டலங்களையும்  விநியோகித்தனர். அவர்களது இநத நடவடிக்கையை தொகுதி மக்கள் உணர்வுப்பூர்மாக பாராட்டி வாழ்த்தினார்கள்.

இதுபற்றி தொகுதி மக்களிடம் வேல்ஸ் மீடியா சார்பாக பேசினோம். “எந்த அமைப்பினர் கால்வாயில் இறங்கி அடைப்பை சரி செய்கிறார்கள்? புயல் பாதிப்பிலிருந்து நாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இந்த இளைஞர்கள் உதவுகிறார்கள். அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும். சேவை உள்ளம் கொண்டவர்கள் அரசியலில் அருகி வருகிறார்கள். சம்பத் போன்ற சமூக அக்கறை உள்ளவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கக்கூடாதுஎன்று அவர்கள் கூறினார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry