‘கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்‘ பா.ஜ.க–வின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. எனவே, இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்துவரும் பல்வேறு மாநிலங்களிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகாவிலும் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களும், ஏழைகளும் அதிகளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. கட்டாய மதமாற்ற புகாரில் கிறிஸ்தவ பாதிரியார்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் மதம் மாறியவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கர்நாடக அரசு உத்தவிட்டது. இதைத் தொடர்ந்து கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகாவைச் சேர்ந்த பேராயர்கள், மதத் தலைவர்கள், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கர்நாடகாவில் பல இடங்களில் கிறிஸ்தவ அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனினும் பெலகாவியில் நடந்து வரும் கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில் ‘மத சுதந்திர பாதுகாப்பு மசோதா 2021′ எனப்படும் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், கட்டாய மதமாற்ற தடை மசோதா கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா 2016 ஆம் ஆண்டு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டதாக மாநில சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி கூறினார். ஆனால் 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வரைவு மசோதா, தற்போதைய பாஜக அரசு கொண்டு வந்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.
The bill was not introduced, discussed & passed in the cabinet meeting.The drafted bill prepared in 2016 was completely different from what the current state govt has drafted in 2021: Siddaramaiah, CLP Leader during the discussion on the anti-conversion bill in Karnataka Assembly pic.twitter.com/invGjPuI92
— ANI (@ANI) December 23, 2021
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேசும்போது, ‘‘எஸ்சி, எஸ்டி மக்களின் நிலைமை எங்களுக்குத் தெரியும். அவர்கள் புறக்கணிக்கப்பட்டு, பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எஸ்சி, எஸ்டி சமூகங்கள் மற்றும் பெண்களைப் பாதுகாப்பதே இந்த மசோதாவைக் கொண்டு வந்ததன் நோக்கம்’’என்றார்.
We know the situation of SC/ST. They are ignored and remain vulnerable. Our intention behind bringing this bill is to protect SC/ST communities and women: Basavaraj Bommai, Karnataka Chief Minister in Assembly pic.twitter.com/sdlvq0hMtT
— ANI (@ANI) December 23, 2021
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry