பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள்! கரூர் மாவட்ட பாஜக சார்பில் கபாடி போட்டி, ரத்ததான முகாம்!

0
70

பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ஏற்பாட்டில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது.

Also Read : பள்ளிக் குழந்தைகளுக்கு தீண்டாமை கொடுமை! தலைவிரித்தாடும் சாதிப் பாகுபாடு!

கரூர் மாவட்ட பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் பிரிவு சார்பாக கரூரில் கபாடி போட்டி நடைபெறுகிறது. 17.09.2022 மற்றும் 18.09.2022 தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 84 அணிகள் பங்கு பெறுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 50,000, மூன்று மற்றும் நான்காம் பரிசாக ரூபாய் 25000 வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியை மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.

கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு இடங்களில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பாஜக நிர்வாகிகள் ஆர்வத்துடன் குருதிக் கொடை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபிநாத், ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாநில பட்டியல் அணி துணைத் தலைவர் தலித் பாண்டியன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அந்த அணியின் மாவட்ட தலைவர் உமாதேவி தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டன. தாந்தோணிமலையில் மாவட்ட நீதிமன்ற வளாகங்கள் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கி பிரதமர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

Also Read : குழந்தைகளிடையே வேகமாகப் பரவும் காய்ச்சல்! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry