கோவை குண்டுவெடிப்பு வழக்கு! குற்றவாளிகளுக்கு நிவாரணம் தரக்கூடாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

0
528

கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவையில் நவம்பர் 29,1997 அன்று செல்வராஜ் என்ற காவலர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டா. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்கள்தாம், 1998 பிப்ரவரி 14 அன்று, குண்டு வெடிப்புக் கலவரமாக மாறியது. நான்கு நாள்களில் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கான மதிப்பில் பொருள்சேதம் ஏற்பட்டது. இந்த வழக்கில் மூஸா  மொய்தீன் உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தாங்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு கருணை அடிப்படையில் சில நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் 16 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தங்களுக்கு குறைந்தபட்சம் ஜாமினாவது வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். சமீபத்தில் விசாரணைக்கு வந்த அந்த மனு, நான்கு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் “சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரும் தற்பொழுதும் தங்களது பழைய சித்தாந்தத்தில் இருக்கின்றனர். அவர்களின் சிறை செயல்பாடுகளில் கூட திருப்தி ஏதும் இல்லை. அலைபேசிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விதிமுறை மீறல்களும் ஈடுபடுகின்றனர். ஆகவே இவர்களுக்கு ஜாமின் உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் பட்சத்தில், மீண்டும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். எனவே இவர்களது ஜாமின் கோரிய மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry