மாணவர்களுக்கு 2GB DATA வழங்கும் திட்டம்! சென்னையில் தொடங்கி தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

0
24

கல்லூர் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் இணையவழி (ஆன்லைன்) வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த வகுப்புகளில் வீட்டில் இருந்தவாறு மாணவர்கள் பங்கேற்று, தங்களுடைய பாடத்திட்டங்களை படித்து வருகின்றனர்.

இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களுக்கு ‘2 ஜி.பி. தரவு‘ (‘2 ஜி.பி. டேட்டா‘) வழங்கப்படும் என்றும், எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லாதரவு அட்டைகள்‘ (‘டேட்டா கார்டு‘) வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 10-ந் தேதி அறிவித்து இருந்தார்.

கொரோனா பலவலை தடுக்கும் நோக்கில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ அரசு நாள்தோறும் 2 ஜிபி கட்டணமில்லா டேட்டா வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. டேட்டாவழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 9 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry