சுங்கக் கட்டணம் நியாயமாக வசூலிக்கப்படுவதில்லை! சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

0
21

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் 2019-ஆம் ஆண்டு முடிந்துவிட்டது, ஆனால் தற்போது வரை சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறார்கள் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதால் கட்டணத்தை வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகையின் அளவு நியாயமாக இருப்பதாக தெரியவில்லை. சுங்க கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற  வேண்டும்என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்தவும் உத்தரவிட்டனர்.

ஃபாஸ்டேக் முறை சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் எனவும், இதுகுறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், நெடுஞ்சாலைகளில் வாகன நெருக்கம் இல்லாத வகையில் மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்து, விசாரனையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry