1930-40 களில் காந்தி, நேரு, அம்பேத்கர், சி.வி. ராமன் ஆகியோர் கையெழுத்திட்ட ஆட்டோகிராஃப் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை மிக பத்திரமாக பாதுகாக்குமாறு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விஜய் பஸ்ருர் என்பவர், தனது தாய்க்கு உதவியாக வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது அவரது தாத்தாவின் ஆட்டோகிராஃப் புத்தகம் கிடைத்துள்ளது. அதில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், சர் சி.வி. ராமன் உள்ளிட்டோரது கையெழுத்துகள் இருந்ததைக் கண்டு ஆச்சரிமயடைந்த அவர், அதை படமெடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி உள்ளது.
கடந்த சனிக்கிழமை இது கிடைத்ததாகவும், 30 ஆண்டுகளாக தனது வீட்டிலிருந்து அந்த ஆட்டோகிராஃப் புத்தகம் தனக்கு தெரியாமலேயே இருந்துவிட்டதாகவும் விஜய் பஸ்ருர் கூறியுள்ளார். அந்த புத்தகத்தை பத்திரமாக பாதுகாக்குமாறு பஸ்ருருக்கு நெட்டிசன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரம், இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, கையெழுத்துகள் ஒரிஜினல்தான் என்பது உறுதியானால், டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்று பலர் கூறியுள்ளனர். உங்களுக்கு கிடைத்திருப்பது புதையல், விலை மதிப்பில்லாதது, இதை பத்திரமாக பாதுகாத்து வையுங்கள் என பஸ்ருருக்கு பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry