Hotstar-ல் வெளியாகிறது ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படம்!  ’சூரரைப் போற்று’க்கு கிடைத்த வரவேற்பால் தயாரிப்பாளர் முடிவு!

0
18

ஆர்யா, அவரது மனைவி சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படம் முன்னணி OTT தளமான Hotstar-ல் வெளியாகிறது. இப்படம் பெரும் வரவேற்பை பெரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வந்தனர். ‘பொன்மகள் வந்தாள்‘, ‘பெண்குயின்‘ ’சூரரைப் போற்றுபோன்ற படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் பெரிய பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவேதான், சூரரைப்போற்று, அந்தகாரம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டன.

இதற்கு முன்பு ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் ‘சூரரைப்போற்று‘, ‘அந்தகாரம்‘ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தியேட்டர்கள் இப்படங்களை மிஸ் செய்துவிட்டன எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள ‘டெடி‘ திரைப்படத்தை நேரடியாக Hotstar-ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே..ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இதில், சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  அடுத்ததாக காக்டெய்ல், டேனி போன்ற படங்களும் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry