பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 0-2 கி.மீ. வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லை.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை, ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5-12 கி.மீ. வரையிலான கட்டணமான 40 ரூபாயை, ரூ.30 ஆகவும், 2-5 கி.மீ. வரை கட்டணம் ரூ.20 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
க்யூ ஆர் கோடு, தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணித்தால் 20 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து இனி 54 கி.மீ. 100 ரூபாயே வசூலிக்கப்படும். ஏற்கனவே வண்ணாரப்பேட்டை–விம்கோ நகர் வழித்தடம் தவிர்த்து 45 கி.மீ.க்கு ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்தது. அதேநேரம், 0-2 கி.மீ. வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லை. ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.” இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry