குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! உண்டா?, இல்லையா? பிடிஆர் முக்கிய தகவல்!

0
119

மதுரையில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டடத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

பின்னர் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய உள்ளது. அதற்காக 133 நிறுவனங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 25 நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்புகளையும், இளைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக நிறுவனத்தின் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகைக்கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் கடன் நிவாரண உதவி வழங்கியது போன்று, தகுதியுடைய நபர்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம். எவ்வளவு விரைவில் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் வழங்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry