கோவிலில் முதல் மரியாதை கடவுளுக்கா? மனிதனுக்கா? உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

0
263

சிவகங்கை மாவட்டம் வடவன்பட்டியைச் சேர்ந்த சேதுபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘சிங்கம்புணரி அடுத்த வடவன்பட்டி சண்டிவீரன் கோவிலில் தனி நபருக்கு சாதி அடிப்படையில் முதல் மரியாதை தரப்படுகிறது. தனி நபருக்கு கோவிலில் முதல் மரியாதை தரப்படுவது சட்டத்திற்கு புறம்பானது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து வட்டாட்சியர் முன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வட்டாட்சியர் முன் நடந்த பேச்சுவார்த்தையில் தனி நபருக்கு முதல் மரியாதை அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது. ஆகவே நாளை மறுநாள் திருவிழா நடக்க உள்ள நிலையில், தனி நபர் யாருக்கும் முதல் மரியாதை தரக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார் அமர்வு, ‘கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே. மனிதனுக்கு அல்ல. கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் உறுதிப்படுத்த வேண்டும்,’ என்று தெரிவித்தது. கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க வேண்டாம் என உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry