திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டு என அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கூறியுள்ளார். இந்து மதத்தை சரமாரியாக விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதை, கி. வீரமணி, சுப. வீரபாண்டியன், திருமாவளவன், எஸ்றா சற்குணம், ஆளூர் ஷா நவாஸ், அருணன் போன்றோர் எப்படி ஜீரணிக்கப்போகிறார்கள் என்பதே விவாதப்பொருளாகி உள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை – கலைஞர் திடலில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறை கேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். அவருடன் சென்றுள்ள அவரது மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு சென்றார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், 8 சுயம்பு ஷேத்திரங்களில் முதன்மையானதுமான வானமாமலை பெருமாள் கோவிலுக்கு, அவர் நெல்லை வரும் போது எல்லாம் செல்வது வழக்கம். அதன்படி சென்ற அவர் வானமாமலை ராமானுஜர் ஜீயர் சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது அங்கு பெருமாளை சேவித்துவிட்டு வீடு திரும்பிய பட்டு என்ற 85 வயது மூதாட்டியிடம், துர்கா ஸ்டாலின் நலம் விசாரித்தார். அந்த மூதாட்டி நீங்கள் யார் என கேட்டதற்கு, அங்கிருந்தவர்கள் துர்கா ஸ்டாலினை அறிமுகம் செய்துவைத்தனர். அப்போது அந்த மூதாட்டி, உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வார்களா? பெருமாள் மீது நம்பிக்கை உண்டா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த துர்கா ஸ்டாலின், “பெருமாள் மீது மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை உண்டு. அவர் கோவிலுக்கு வருவார்” என பதில் அளித்தார்.
Thanks: TOI Samayam
திமுக தலைவர் ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக அரசியல் களத்தில் காட்டிக்கொள்கிறார். குறிப்பாக இந்து மதத்தை எதிர்ப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். கோவிலில் திலகம் வைத்தால் உடனடியாக அதை அவர் அழித்துவிடுவார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது கொடுத்த விபூதியை அங்கேயே அவர் கீழே கொட்டினார். உதயநிதி ஸ்டாலினும், வினாயகர் சிலையை களமண் என்று பேசினார். ஆனால், இருவருமே, இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதத்தை புகழ்வது மட்டுமின்றி, அவர்களது பண்டிகைக்கு வாழ்த்தும் தெரிவிப்பார்கள்.
சமூக ஊடகளில் திமுக–வின் இந்து எதிர்ப்பு பெரிய பேசுபொருளாகிவிட்ட நிலையில், வாக்குகள் சிதறிவிடுமோ என அஞ்சி, ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கையில் வேல் ஏந்துகின்றனர். இதன் மூலம், மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என அவர்கள் நம்புகின்றனர். ஆனால், இது தேர்தல் நேரத்து வேஷம் என்றே சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
ஸ்டாலினின் ஏகோபித்த ஆதரவுடன், கி. வீரமணி, சுப. வீரபாண்டியன், திருமாவளவன், எஸ்றா சற்குணம், ஆளூர் ஷா நவாஸ் உள்ளிட்டோர் இந்து மத நம்பிக்கைகளை தரக்குறைவாக விமர்சிப்பதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அப்படியிருக்க, மு.க. ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டு, அவர் கோயிலுக்கு வருவார் என்று துர்கா ஸ்டாலின் கூறியிருப்பது, புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து மத எதிர்ப்பில்தானே திமுக அரசியல் செய்கிறது, எனவே, இதுவும் அரசியலுக்கான ஸ்டன்ட்டாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry