மின் நுகர்வோருக்கு அடுத்த பேரிடி! ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்ற உத்தரவு!

0
1055

ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவற்றை ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என்று மின் பயனர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கடிதம் அனுப்பத் தொடங்கியிருக்கிறது. கடிதம் கிடைத்த 15 நாட்களுக்குள் பயனர் மின் அலுவலகத்தை அணுகி ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும்.

மின் பயனர்கள் தனித்தனி இணைப்பை ஒரே இணைப்பாக மாற்றினால் 1-A கட்டண விகிதத்தில் வருவார்கள். இது மின் கட்டணத்தை உயரத்திய பிறகான வழக்கமான கட்டணம். ஒரே மின் இணைப்பாக மாற்றாவிட்டால் “1 – D” கட்டண விகித பட்டியல் கீழ் பயனர்கள் மாற்றப்படுவார்கள். “1 – D” விதியில் ஒரு யூனிட்-க்கு ரூ.8 மற்றும் ஒரு கிலோ வாட்ஸ்-க்கு வாடகை ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் 100 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.2,800 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரே வளாகத்தில் குறைந்தபட்சம் நான்கு குடியிருப்புகள் இருக்கும்பட்சத்தில், அங்கு பொது பயன்பாட்டிற்காக, லிஃப்ட், மின் விளக்குகள், மோட்டார்களுக்கு ஒரு பொது இணைப்பு மின் இணைப்பு இருக்கும். அந்த மின் இணைப்பிற்கு வீடுகளுக்கான கட்டண விகிதமே இதுவரை விதிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், தற்போது மின்சார வாரியம் 1-D என்ற புதிய கட்டண விகிதத்தின்படி பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8 கட்டணமாக வசூலிக்கிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மேலும் கூடுதல் கட்டண சுமை ஏற்பட்டுள்ளது.

மேலும், ஒரே வீட்டில் தனித்தனியாக வசிக்கும் மின் பயனர்களின் மின் இணைப்புகளை ஒருவர் பெயரிலேயே மாற்றுவது என்பது, நடுத்தர மக்கள், ஏழை – எளிய மக்களின் மின் கட்டண சுமையை மேலும் அதிகரிக்கும். இதனால் சாதாரணமாக மின் பயன்பாடு 500 யூனிட்டுக்களுக்கு மேலாகி கட்டணம் அதிகம் செலுத்தக் கூடிய அபாயம் இருக்கின்றது. இலவச மின்சாரமும் பறிபோகும். அதாவது ஒரு யூனிட்டிற்கு ரூ.10-க்கு மேல் செலுத்த வேண்டிய ஒரு நிலை ஏற்படும். இதுமட்டுமின்றி, சிறு குறு தொழில்கள், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடும். வாடகைதாரர்கள் பாடும் இனிமேல் கஷ்டம்தான்.

உரிய அறிவிப்பின்றி, விழிப்புணர்வின்றி இந்தத் திட்டம் திடீரென அமல்படுத்தப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவதில் குழப்பம் ஏற்படும்; ஒவ்வொரு இணைப்புக்கும் செலுத்தியுள்ள டெபாசிட் தொகை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இலவச மின்சாரத்தை நிறுத்தவதற்காக தான் இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக மின் பயனர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ஏற்கெனவே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவு நீர் வரி உயர்வு, கேஸ் சிலிண்டர் வரி உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு என திண்டாடும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் சுமைதான். அனைத்து மின் இணைப்புகளையும் ஒன்றாக இணைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என மின் பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read : தமிழகத்தில் வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்! மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்! 7 நாட்கள் வரை நீடிக்கும் பாதிப்பு!

தமிழகத்தில் மின் பயனர்களின் வீடுகளில் ஒன்றிக்கும் மேற்பட்ட மின் இணைப்பு பெற்றிருந்தால் அவற்றை ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்ததன் அடிப்படியிலான தரவுகளை வைத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த நிலையில்தான் திமுக அரசு, மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் உத்தரவிட்டு, அதற்கான   சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வந்தது. இதற்கான அவகாசம் பிப்வரி மாதத்துடன் முடிவடைந்துள்ளது. 2.67 கோடி மின் நுகர்வோரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry