ரங்கசாமியை கைவிடாத சென்ட்டிமென்ட்! குறித்த நேரத்தில் கட்சி அலுவலகம் திறப்பு! அடுத்து ஆட்சி உறுதி என கட்சியினர் உற்சாகம்!

0
27

நிவர் புயல் உக்கிரமாக தாண்டவமாட, கட்சி அலுவலகம் திட்டமிட்டபடி திறக்க முடியாவிட்டால், தலைவர் ரங்கசாமி சோர்ந்துவிடுவாரே என என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கவலையில் இருந்தனர். இயற்கை கைகொடுக்க, குறித்த நேரத்தில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதை, ஆட்சி மாற்றத்துக்கான சகுனமாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

ரங்கசாமிகடவுள் நம்பிக்கைசென்ட்டிமென்ட், இந்த மூன்றையும் பிரிக்கவே முடியாது. கட்சி நிர்வாகிகள், மக்கள் என்பதையெல்லாம் தாண்டி, என்.ஆர். முழுமையாக நம்புவது கடவுளைத்தான். வேட்பாளர் தேர்வு, கூட்டணி என அனைத்துமே கடவுளிடம் உத்தரவு கேட்டு செய்யக்கூடியவர் அவர். இதனாலேயே சென்ட்டிமென்ட்டும் அவருடன் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ரங்கசாமி இருக்கிறார். இங்கேயும் அவருக்கு சென்ட்டிமென்ட் குறுக்கே நின்றது. ரெட்டியார்பாளையத்தில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், நாடாளுமன்ற  தேர்தல், இடைத்தேர்தல் என அடுத்தடுத்து தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

எனவே சென்ட்டிமென்ட்டாக கட்சி அலுவலகத்தை மாற்ற முடிவு செய்த நிலையில், ஈசிஆர் சாலையில் புதிதாகக் கட்சி அலுவலகம் திறக்க கடந்த மாதம் பூமி பூஜை போடப்பட்டது.  கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிலையில், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று(26.11.2020) திறக்க முடிவு செய்யப்பட்டது.

நிவர் புயல் நேற்று(25.11.2020) ருத்ரதாண்டவமாடிய நிலையில், கட்சி அலுவலகம் திறப்பு விழா தள்ளப்போகலாம், இது என்.ஆர்.-ஐ சென்ட்டிமென்ட்டாக பாதிக்கும், அபசகுனமாக நினைப்பார் என எதிர்க்கட்சியினர் கருதினர். ஆனால், சென்ட்டிமென்ட்டோடு இணைந்து, இயற்கையும், அவர் வணங்கும் கடவுளும் கைகொடுக்க, கட்சி கொடியை உற்சாகத்துடன் ஏற்றிவைத்து, திட்டமிட்டபடி இன்று(26.11.2020) காலை கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்துவைத்த ரங்கசாமி, பயபக்தியுடன் பூஜையும் செய்தார். பின்னர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். கட்சி அலுவலகம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குதிரைகளுக்கு அவர் தீபாராதனை காண்பித்தார். இதைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் என்.ஆர்.காங்கிரஸ் முகாம் மகிழச்சியில் திளைக்கிறது.

இதுபற்றி என்.ஆர். காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் சீனு. கந்தகுமாரிடம் பேசினோம். “பலத்த காற்றுடன் நேற்று கன மழை கொட்டிய நிலையில், இன்று மழையின்றி, வானம் வெளிறி, கட்சி அலுவலகம் திறக்க கடவுள் அருள்புரிந்துள்ளார். மிகச்சிறந்த ஆன்மிகவாதியான என்.ஆர்., நிவர் புயலால் புதுச்சேரி பெருமளவு பாதிக்காது, திட்டமிட்டபடி கட்சி அலுவலகத்தை திறக்க முடியும் என உறுதியாகக் கூறினார். அவர் சொன்னபடிதான் நடந்துள்ளது. இதை பாசிடிவ் சிக்னலாகவே நாங்கள் பார்க்கிறோம். 2021 தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று, ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்பது உறுதி எனறார்அவர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry