புதுச்சேரி வணிகத்தில் புதிய அத்தியாயம்! தமிழ்நாடு வணிகர்களின் சங்கத்தின் முப்பெரும் விழா! சாதித்த ரவி அண்ணாமலை!

0
147

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் அமைப்பு, வணிகன் என்ற பெயரில் செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு போன்று, வணிகர்களின் நலனுக்காக செயல்படும் இயக்கம்தான் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் என்ற அமைப்பு. செந்தில்குமார் தலைமையில் இயங்கும் இந்த அமைப்புக்கு பல மாநிலங்களில் கிளை இருக்கிறது.

புதுச்சேரி மாநில கிளையின் சார்பாக, மாநில தலைவர் ரவி அண்ணாமலை தலைமையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடந்த 22.11.2020 அன்று முப்பெரும் விழா நடைபெற்றது.  குயவர்பாளையம் கீர்த்தி மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் முதல் நாளில், (21-ந் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில நிர்வாகிகள் சுமார் 100 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் உறுப்பினர் சேர்க்கை, சங்கமத்தை வலுப்படுத்துவது, விரிவாக்குவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.   

இதைத்தொடர்ந்து 22-ந் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவை முதலமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாநில தலைவர் ரவி அண்ணாமலை, முதலமைச்சருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து கவுரவித்தார்.

பின்னர் வணிகன் செயலியை அறிமுகம் செய்துவைத்த முதலமைச்சர், புதுச்சேரி மாநில தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் பெயர்ப் பலகையை திறந்துவைத்தார். வணிகர் சங்கமத்தின்ஒரு தாய் மக்கள்என்ற இதழையும் முதலமைச்சர் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

செல்ஃபோனில் இயங்கும் இந்த வணிகன் செயலியை பதிவிறக்கி, ரிஜிஸ்டர் செய்து கொள்வதன் மூலம் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்பெற முடியும். முப்பெரும் விழாவில், சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.. ஜான்குமார்,  தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் மண்டல பொறுப்பாளர் பழனிமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry