ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?

0
221

நம்மில் பலருக்கு அவரவர் நட்சத்திரம், ராசி நிச்சயம் தெரிந்திருக்கும். சிலர், தங்களுக்கு நடைபெறும் தசா, புத்தி  வரை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் கரணநாதன் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ஜோதிட ஆர்வலர்கள், ஓரளவுக்கு ஜோதிடம் தெரிந்தவர்களை தவிர).

ஒருவரது ஜாதகத்தில் லக்னம், நட்சத்திரம், ராசி எந்தளவிற்கு முக்கியமோ அதே போல் கரணமும் முக்கியம். நாம் பிறக்கும் நேரத்தில் ஒரு கரணம் நடப்பில் இருக்கும். அந்த கரணத்திற்கு உண்டான தெய்வம், கிரகத்தை வழிபடுவதுடன், கரண நாதனை குறிக்கும் விலங்கு, பறவையை வளர்ப்பது, உணவளிப்பதன் மூலம் வாழ்வில் வெற்றிகளை குவிக்கலாம்.

கரணங்கள் என்பது ஒரு நாளில் வரும் திதியில் அரைப் பகுதியாகும். மொத்தம் 11 வகையான கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் “ஸ்திர” கரணங்கள், அதாவது நிலையான கரணங்கள். இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் “சர” கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள். இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும். இதில் ஒன்றில்தான் நாம் பிறந்திருப்போம் (நமது ஜாதகத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்). ஒவ்வொரு கரணத்திற்கும் ஒரு கிரகம் அதிபதியாகவும், குறிப்பிட்ட தெய்வம் மற்றும் விலங்கு, பறவை ஆகியன இருக்கும். மனிதர்கள் தாங்கள் பிறக்கும் கரணத்திற்கான பறவைகள், மிருகங்களின் குணங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.

Also Read : நீங்களும், உங்கள் கடன்களும்..! அதென்ன சுப கடன், அசுபக் கடன்! கடன் வாங்கக் கூடாத நாட்கள் எவை? How to get rid of loans by astrology!

நமது கரணத்திற்கு உண்டான தெய்வத்தை வழிபடுவதன் மூலமாகவும், விலங்குகள், பறவைகளை வளர்ப்பதன் மூலமாகவும் கரணநாதனை வழிபாடு செய்யலாம். தசா நாதன், நட்சத்திர அதிபதியை போல் கரணநாதனை வழிபட்டால் வாழ்வில் அனைத்திலும் வெற்றிதான்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். எதற்காக சிங்கத்தை வளர்த்தார் என்று தெரியுமா? நடிகர் ரஜினி தனது படங்களில் பாம்பு காட்சிகளை எதற்கு அதிகம் வைத்தார் தெரியுமா? நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் எதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தையும், புலியையும் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர் என்று தெரியுமா? இதெல்லாம் கரணநாதன் வழிபாடுதான்.

நாடோடி மன்னன் படத்தில் வரும் சிங்கத்தை எம்.ஜி.ஆர். வளர்த்து வந்தார். எம்.ஜி.ஆர் தனது கரணநாதனுக்கு உண்டான விலங்கை வளர்த்து வந்ததால் நடிப்பில் உச்சம் தொட்டதுடன், தமிழ்நாட்டிற்கே முதலமைச்சர் ஆனார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் பாம்பு காட்சிகள் அதிகம் இருக்கும் கவனித்து இருக்கிறீர்களா, அதுவும் கரணநாதனை வழிபடும் வேலைதான்.

Also Read : வார ராசி பலன்! தேடி வந்து கொடுக்கறாங்கன்னு கடன் வாங்கினீங்க..! இந்த ராசிக்காரங்க படித்துப் பார்க்காமல் கையெழுத்திடாதீங்க!

நடிகர்கள் விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும் தங்களது கரணநாதனை வழிபடவே சிங்கம், புலியை தத்தெடுத்துள்ளனர். அதன்பிறகே அவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. நடிகர் யோகிபாவும் வராகி அம்மன் (கரணநாதனுக்கு உண்டான கடவுள்) கோயிலை கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்குள், அவர் நடித்த மண்டேலா படம் ஆஸ்கர் விருது பட்டியலில் வந்தது. இப்படி பலர் கரணநாதனை வழிபட்டு வெற்றி பெறுகிறார்கள். நாமும் கரணநாதனை வழிபட்டு வெற்றியை நமதாக்குவோம்..!

குறிப்பு : – வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் திட்டம் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. https://tickets.aazp.in/feedcost.php என்ற இணைய முகவரியில் சென்று பார்த்தால் நமக்கு பிடித்த விலங்கை தத்தெடுத்து அதற்கு உண்டான செலவை ஏற்று கொள்ளலாம். அதேபோல் நமது கரணநாதனுக்கு உண்டான விலங்கையும் தத்தெடுத்து வளர்க்கலாம்.

கட்டுரையாளர் :- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. தொடர்புக்கு : astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry