நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு; அரசு தலையிட முடியாது! தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

0
44

நீட் தேர்வு மத்திய அரசின் முடிவல்ல என்றும், அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எனவும் கூறியுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‛நீட் தேர்வு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது’ எனவும் கூறியுள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகம் வந்திருந்தார். இன்று (செப்.,20) காலையில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார். பின்னர் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சந்தித்தார். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: சண்டிகர் பல்கலையில் மாணவிகளின் அந்தரங்க வீடியோக்கள் கசிந்தது தொடர்பாக அம்மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். தேசிய கல்வி கொள்கையை தமிழகம் விரைவில் ஏற்றுக்கொள்ளும். தமிழ் ஒரு தேசிய மொழி. கல்வி என்பது தாய்மொழியில் இருக்க வேண்டும். அதன்படி, தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்ப்பவர்கள் யாரிடமும் நியாயமான காரணங்கள் தெரியவில்லை.

Also Read : விவசாயிகள் போராட்டம், அக்னிபத் போராட்டங்களில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள்! உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்!

தற்போது சிலர் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக இல்லை என்றாலும், படிப்படியாக அவர்களும் ஆதரவளிப்பார்கள். தமிழகம் கல்வியில் சிறந்த பாரம்பரியத்தை கொண்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின் கட்டமைப்பில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருக்கும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது, அனைத்து தரப்பு மக்களையும் சமன் படுத்தவே நீட் தேர்வு. ஏற்கனவே நீட் தேர்வு குறித்து பார்லிமென்டில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன், நீட் தேர்வு அரசின் முடிவல்ல; அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இதில் அரசு தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry