எச்சரிக்கை… இந்த 9 பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! ரகசியமாக செய்வதாக நினைத்து சிக்கிடாதீங்க! தப்பவே முடியாது, கவனம்..!

0
128
Nothing you do is a secret; Because nine people are always watching over you | Image Credit - Isha

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரகசியம்” அல்ல என்பதும், அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால், நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்துவிட முடியாது.

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன், எமன், காலம்(நேரம்). பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலேயே எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர்.

எமன் என்பவன் யார்? எமனின் கணக்குப்பிள்ளை சித்திரகுப்தன் என்பர். இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த=ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் ‘சித்திர’ ‘குப்த’ என்றனர்.

Also Read : உங்களுக்குள் ஒரு Super Hero! ஆழ் மனதின் அற்புத சக்திகள்! வெற்றியை கையில் வைத்துக்கொண்டு வெளியில் தேடாதீர்! Tips to train your subconscious mind for success!

ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது. அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுப்தன் அல்லது எமனுக்குத் தெரியும். சித்திரகுபதன், எமன் என்பவர்கள் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்கலையெல்லாம் கூட்டிக் கழித்து பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.

நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இந்துக்களுக்கு இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். நீரை மந்திரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி, முனிவர்களுக்கு இருந்ததாக நம்பப்படுகிறது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ, வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும், வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.

நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்னி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். கல்வெட்டுகளில் “சூரியர் சந்திர சாட்சியாக” என்ற சொற்களையோ, இரண்டின் படங்களையோ காணலாம்.

Also Read : வீட்டில் கண்ணாடியை எந்த திசையில் வைக்க வேண்டும்? பெட் ரூமில் வைத்தால்…! Mirror Vastu: Tips for placing mirrors at home and office!

காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது. விண்ணில் உலவும் செயற்கைக் கோள்கள், நம் வீட்டு கொல்லைபுறத்தைக் கூடப் படம் பிடிக்கும்; கூகுள் மேப் மூலம் நம் நண்பர் வீட்டிற்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை நம் வீட்டுக் கம்ப்யூட்டரிலேயே காணமுடியும்; சி.சி.டி.வி மூலம் கொலைகாரனைக் கூடக் கண்டுபிடிக்கமுடியும். இன்ஃப்ரா ரெட் காமிரா, பைனாகுலர் மூலம் இருட்டில் நடப்பதையும் காணமுடியும். ஆனால் இவைகளிடமிருந்து கூட தப்பிக்க வழி உண்டு. ஆனால் இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது. ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்; நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry