அரியர் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அழுத்தத்தால் தமிழக அரசு அறிவிப்பு!

0
11

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

இதுதொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது, தேர்வை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முதன்மை அமர்வு அறிவுறுத்தியிருந்தது

அப்போது, தமிழக அரசு தரப்பில், அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் மூலமாக நடத்துவதற்கான தேதிகள் அந்தந்த பல்கலைகழகங்கள் மூலம் அறிவிக்கப்படும். அதற்கு முன்பாக யுஜிசியிடம் கலந்தாலோசிக்கப்படும். ஆன்லைன் மூலம் தேர்வு எழுதாதவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். தேர்வு நடத்த இருக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொள்வதாக  யுஜிசியும் கூறியது. இதையடுத்து, அடுத்த 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry