கொரோனா பாதிப்பு புதிய உச்சம்! ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தொற்று உறுதி! ஆயிரம் பேர் உயிரிழப்பு!

0
9

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்தனர்.

மிகவும் வேகமாகப் பரவும் கோவிட்-19 2-வது அலையால், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது

Also Read : கொரோனா பாதிப்பு இப்போதைக்கு குறையாது! இறப்பு விகிதம் 5% அதிகரிப்பு! WHO எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 93,528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 11 கோடியே 44 லட்சத்து 93 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டிலும், கோவிட்-19 பெருந்தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடுகிறது. தொற்று அதிகரித்ததால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனாலும், பெருந்தொற்று கட்டுக்குள் வராமல், நேற்று ஒரு நாளில் மட்டும் 7,800-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமமன்றத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry