இந்திய ஃப்யூச்சர் போன் பயனர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற ஃபோன்களில் நோக்கியாவுக்கு தனியிடம் உண்டு. கடந்த 2001 காலக்கட்டத்தில் இந்தியாவில் ஃபோன் பயன்பாடு பரவலாகத் தொடங்கிய நேரத்தில் பெரும்பாலான இந்தியர்கள் ‘ஹலோ’ சொன்னதும் நோக்கியா போனுடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கால ஓட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் வரவு அதனை மடைமாற்றியது.
நோக்கியா 3210 மாடல் செல்போன் 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில், பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி.(HMD) குளோபல் நிறுவனம், இந்திய சந்தையில் புதிய ஃப்யூச்சர் ஃபோன் மாடலான நோக்கியா 3210 4ஜி ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபோனில் யூடியூப் மற்றும் யுபிஐ போன்ற அம்சங்களை பயனர்கள் பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Also Read : எம்.பி-க்களின்(MP) ஊதியமும், சலுகைகளும்! வீட்டு வாடகைக்காக மட்டும் மாதம் ரூ.2 லட்சம்! அது மட்டுமா…!
நீலம், கருப்பு, மஞ்சள் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. யூனிசாக் டி107 சிப்செட், 64எம்பி ரேம், 128எம்பி ஸ்டோரேஜ், 2.4 இன்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளே, டைப்-சி சார்ஜிங் போர்ட், 1,450mAh பேட்டரி(9.8 மணி நேரம் பேசலாம்), நோக்கியா 3210 4ஜியில் எல்இடி ப்ளாஷ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எம்பி 3 பிளேயர் மற்றும் எஃப்.எம் ரேடியோ, 2 மெகாபிக்சல் கேமரா, பில்ட்-இன் யுபிஐ பயன்பாடு, கிளவுட் ஆப்ஸ் மூலம் யூடியூப் போன்ற செயலிகளையும் இதில் பயன்படுத்தலாம். இது கிளாசிக் டி9 கீபோர்டு கொண்டுள்ளது.
மேலும், இணைப்பு விருப்பங்களில் இரட்டை சிம், 4 ஜி வோல்ட்இ மற்றும் ப்ளூடூத் 5.0 ஆகியவை இந்த ஃபோனில் அடங்கும். நோக்கியா 3210 122 × 52 × 13.14 மிமீ அளவு மற்றும் 62 கிராம் எடை கொண்டது. நோக்கியாவின் அடையாளங்களில் ஒன்றான ‘ஸ்நேக்’ கேமும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த போனின் விலை ரூ.3,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஹெச்.எம்.டி. (Amazon and HMD eStore) நிறுவன வலைதளத்தில் நேரடியாக இந்த போனை பயனர்கள் வாங்கலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry